உலகை சுற்றிப் பார்க்கணுமா.. 25 லட்சம் ரூபாய் சம்பளம்.. 40,000 விண்ணப்பங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகைச் சுற்றிப் பார்க்கும் சுவாரஸ்யமான வேலைக்கு, இதுவரை 40,000 பேர் விண்ணப்பித்துள்ள சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது..

உலகை சுற்றிப் பார்க்கணுமா.. 25 லட்சம் ரூபாய் சம்பளம்.. 40,000 விண்ணப்பங்கள்!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 26 வயதாகும் மேத்யூவ் லேப்ரே, தன்னுடன் உலகம் முழுவதும் பயணம் செய்ய உதவியாளர் வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தார். 'World's Coolest Job' என்ற தலைப்பில் அந்த விளம்பரத்தை, அவர் இணையத்தில் பதிவு செய்து இருந்தார்.

தனது உதவியாளாருக்கு ஆஸ்திரேலிய மதிப்பில் 52,000 டாலர் ஊதியமாக வழங்கப்படும் என்று மேத்யூவ் லேப்ரே அறிவித்துள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம், காப்பீடு செலவீனங்கள் தனியாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆன்லைனில் சுமார் 40,000 பேர் இந்த வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் 75 சதவிகிதப் பெண்கள், 25 சதவிகித ஆண்கள் ஆவர். ஆண்களை விட பெண்களே அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதாகாவும், பெண்கள் பலர் கல்யாணம் செய்து கொள்ள ஆசை தெரிவித்துள்ளனர் எனவும் மேத்யூவ் லேப்ரே தெரிவித்துள்ளார்.

யு.கே., இத்தாலி, தென் அமெரிக்கா, மற்றும் ஆசியா போன்ற நாடுகளில்  இருந்துதான் விண்ணப்பங்கள் பெரும்பாலும் வந்துள்ளதாக மேத்யூவ் தெரிவித்துள்ளார். அதிலும் 23 முதல் 37 வயது வரை உள்ளவர்களே அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

9 முதல் 5 மணி வரை உள்ள வேலையை தவிர்த்துவிட்டு, புதிய வேலையில் தங்களது திறமையை காண்பிக்க விண்ணப்பதாரர்கள் ஆர்வம் காட்டி வருவதாக மேத்யூ தெரிவித்துள்ளார்.

THECOOLESTINTHEWORLD, MATTHEWLEPRE, PROPOSALS, JOB

மற்ற செய்திகள்