'கோடி கோடியாய் கொட்டி கொடுத்துக் கட்டிய வீடு'... 'கண்ணுக்கு முன்னாடியே தரைமட்டமாகப் போகும் சோகம்'... கோடீஸ்வரருக்கு வந்த சோதனை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆசை ஆசையாகப் பார்த்துக் கட்டிய வீடு தனது கண்முன்பே தரைமட்டமாக்கப் போவதை கோடீஸ்வரர் ஒருவர் பார்க்கப் போகிறார்.

பிரஞ்சு மொழி பேசும் நாடான Monacoவில் அமைந்துள்ள பிரம்மாண்ட வீடு தான் Chateau. இந்த வீட்டினை பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரான பேட்ரிக் என்பவர் கடந்த 2005ல் இருந்து 2009ம் காலகட்டத்தில் கட்டினார். 32,000 ஆயிரம் சதுர அடியில் 18 படுக்கை அறைகள் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 70 மில்லியன் டாலர் ஆகும். 17 ஏக்கர் தோட்டம், அசரவைக்கும் நீச்சல் குளம் மற்றும் 2 ஹெலிபேட்கள் எனப் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் இந்த வீட்டில் இல்லாத வசதிகளே இல்லை எனக் கூறலாம்.

இந்த சூழ்நிலையில் இந்த பிரமாண்ட வீடு எந்த வித அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், எந்தவித அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டினை இடித்துத் தள்ள உத்தரவிட்டது. அதன்படி 18 மாதங்களில் இந்த வீடானது இடித்து தள்ளப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் துரதிஷ்டம் என்னவென்றால், பேட்ரிக் இந்த வீட்டினை கட்ட அனுமதி வாங்கியுள்ளார். ஆனால் அது வாய்மொழியாக இருந்ததே தவிர எழுத்து வடிவில் அவர் பெறவில்லை.  அதுவே தற்போது பேட்ரிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் மிகவும் கடுமையாகப் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், 2022 ஜூனுக்கு பிறகும் இந்த வீட்டினை இடிக்காமலிருந்தால் தினமும் 600 டாலர் அபராதமாகச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

அதன்படி பார்த்தால் ஆண்டுக்கு 2,20,000 டாலர்கள் அபராதமாகச் செலுத்தும் நிலைக்கு பேட்ரிக் தள்ளப்படுவார். இதனால் தானே ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டினை இடிக்கும் நிலைக்கு தற்போது பேட்ரிக் தள்ளப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்