"அடுத்து அந்த இடத்துக்கு போறேன்".. டூரிஸ்ட் உலகின் டேஞ்சரஸ் ஃப்ளோ போட்ட திகிலான ட்வீட்.. "போகாதீங்க" கதறும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் ஆபத்தான இடங்களுக்கு மட்டுமே சுற்றுலா செல்லும் மைல்ஸ் ரூட்லெட்ஜ் என்னும் இளைஞர் அடுத்து தான் செல்ல இருக்கும் இடம் குறித்து தெரிவிக்க, நெட்டிசன்கள் "தயவு செஞ்சு அங்கமட்டும் போகாதீங்க" என்று கெஞ்சி வருகின்றனர்.
மைல்ஸ் ரூட்லெட்ஜ்
இங்கிலாந்தின் பெர்மிங்கம் பகுதியை சேர்த்தவரான மைல்ஸ், உலகின் ஆபத்தான இடங்களுக்கு சுற்றுலா செல்வதையே தனது வழக்கமாக கொண்டுள்ளார். இயற்பியல் மாணவரான இவர், தாலிபான்கள் கைப்பற்றிய நேரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சென்றார். அதன்பிறகு தாலிபான்களால் அவர் வெளியேற்றப்பட்டார். போராட்டம் நடைபெறும் நேரத்தில் கஜகஸ்தான் நாட்டிற்கும், ரஷ்ய படையெடுப்பு துவங்கிய பிறகு உக்ரைன் நாட்டிற்கும் சென்றார்.
இந்நிலையில், தற்போது அவர் புதிய பயணத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதன்படி அடுத்ததாக ஆபத்தான வடக்கு சென்டினென்டல் தீவுக்கு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார் மைல்ஸ். இதனையடுத்து இந்த திட்டத்தை கைவிடுமாறு நெட்டிசன்கள் தெரிவித்துவருகின்றனர்.
வடக்கு சென்டினென்டல் தீவு
அழகிய கடற்கரைகளை கொண்ட அந்தமான் தீவுக்கு அருகே பல தீவுகள் இருக்கின்றன. இவற்றில் பல தீவுகளில் இன்னும் மனித காலடித்தடம் கூட பட்டதில்லை. இங்கிருக்கும் சில தீவுகளில் பழமையான பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர். அப்படி, நேக்ரிடோ இனத்தை சேர்ந்த பழங்குடியினர் வசிக்கும் தீவுதான் இந்த வடக்கு சென்டினென்டல் தீவு.
இந்த மக்கள் வெளியுலகத்தை சேர்ந்த யாரையும் தங்களது தீவுக்குள் அனுமதிப்பது இல்லை. அப்படி, இந்த தீவுக்கு சென்ற பலரையும் அம்பெய்தி கொலையும் செய்திருக்கிறார்கள் இந்த பழங்குடியினர். இந்நிலையில் இந்த தீவுக்குத்தான் தற்போது, மைல்ஸ் செல்வதாக அறிவித்திருக்கிறார்.
வேண்டாம் தம்பி
ஆபத்தான வடக்கு சென்டினென்டல் தீவுக்கு செல்வதாக, மைல்ஸ் அறிவிக்க அவரது சமூக வலைதள பக்கங்களில் நெட்டிசன்கள் இந்த திட்டத்தை கைவிடுமாறு தெரிவித்துவருகின்றனர். அதில்," அந்த மக்களுக்கு என்று தனித்தமையான கலாச்சாரம் இருக்கிறது. உங்களைப்போன்ற மக்கள் செல்வதால் அது பாதிப்படையும்" எனவும் "நாம் நம்முடைய இடங்களில் இருப்பதைப்போலவே அவர்களும் அந்த தீவில் வசித்துவருகிறார்கள். அங்கே பயணிகள் செல்வது ஆபத்தானது" எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
உலகின் ஆபத்தான இடங்களில் ஒன்றான வடக்கு சென்டினென்டல் தீவுக்கு செல்ல இருப்பதாக மைல்ஸ் அறிவித்திருப்பது இணையதளத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வெடித்த எரிமலை.. வெளியுலக தொடர்பில்லாமல் தவிக்கும் டோங்கோ தீவு.. உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்
- ஊட்டிக்கு தனியா தான் போகணும் போலையே! வெளியான கட்டுப்பாடுகள்
- 'அரசன்' ஆக ஆசை இருக்கா...? உடனே 'அப்ளை' பண்ணுங்க...! 'பீர் அபிஷேகமும் உண்டு...' - வினோத நடைமுறை...!
- என்னங்க சொல்றீங்க..! கொச்சி அருகே கடலுக்கு அடியில் புதிய தீவு..? கூகுள் மேப்பால் வெளிவந்த தகவல்..!
- 'படகுல ஏறி எஸ்கேப் ஆக பார்த்தார்...' 'மடக்கி பிடித்த லோக்கல் போலீஸ்...' 'ரூ.13,500 கோடி மோசடி செய்த விவகாரம்...' - பரபரப்பு பின்னணி...!
- 'ஒரு சேலை வாங்கயாவது...' 'இந்த பணத்த வாங்கிக்கோங்க பாட்டி...' 'கெடைக்காதுன்னு நெனச்சது கெடச்சப்போ...' 'அழுகையே வந்திடுச்சு...' - மூதாட்டியின் நேர்மை...!
- ‘சுற்றுலா சென்றபோது’... ‘பிரேக் பிடிக்காததால்’... ‘மலைச் சரிவில் வேன் கவிழ்ந்து நேர்ந்த சோகம்’!
- ‘சுற்றுலா’ சென்ற இடத்தில்... ‘அதிவேகத்தில்’ பின்னால் வந்த பேருந்தால் ‘கோர’ விபத்து... ‘மதுரையில்’ நேர்ந்த சோகம்...
- ‘58 பயணிகளுடன்’ கிளம்பிய ‘பேருந்து’... சுற்றுலாவின்போது ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கர’ விபத்து...
- ‘திடீரென’ மோதித் தள்ளிய ‘பேருந்து’... அடுத்த ‘நொடி’ சாலையில் ‘கவிழ்ந்து’ உருண்ட பயங்கரம்... கோர விபத்தில் ‘16 பேர்’ பலி; ‘42 பேர்’ படுகாயம்...