விமானத்தை துளைத்த துப்பாக்கி கொண்டு.. தரையிறங்கியபோது நடந்த சம்பவத்தால் அலறிய பயணிகள்.. பரபரப்பான ஏர்போர்ட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லெபனான் நாட்டில் தரையிறங்கிய விமானத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் விமான நிலையமே பரபரப்புடன் காணப்படுகிறது. இருப்பினும் பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | கல்யாணத்துக்கு மறுத்த காதலி.. வீட்டுக்கே போய் இளைஞர் செஞ்ச காரியம்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த அடுத்த அதிர்ச்சி..!

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்-ல் உள்ள விமான நிலையத்தில் தான் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஜோர்டான் நாட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை மிடில் ஈஸ்ட் ஏர்லைன்ஸ் (Middle East Airlines) நிறுவனத்தின் விமானம் ஒன்று கிளம்பியிருக்கிறது. இந்த விமானம் லெபனானின் பெய்ரூட்-ல் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

அப்போது, எங்கிருந்தோ பாய்ந்து வந்த துப்பாக்கிக்குண்டு விமானத்தை துளைத்துச் சென்றிருக்கிறது. இதனால் விமானத்தின் fuselage பகுதியில் துளை ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தினால் பயணிகள் பதற்றம் அடைந்த நிலையில், விமான நிலைய அதிகாரிகள் துரிதமாக பயணிகளை கீழே இறக்கியிருக்கிறார்கள்.

இந்த துரதிருஷ்வசமான சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மிடில் ஈஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் எல்-ஹவுட் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"ஆண்டு தோறும் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஏழு முதல் எட்டு விமானங்களில் இப்படி மர்ம துப்பாக்கிச்சூடு நடக்கிறது. ஆனால், முதன்முறையாக இயக்கத்தில் இருந்த விமானத்தின் மீது துப்பாக்கிக்குண்டு பாய்ந்து உள்ளது" என்றார்.

என்ன காரணம்?

லெபனான் நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கொண்டாட்டங்களில் துப்பாக்கிகளை கண்டபடி சுடுவதால் இப்படியான சம்பவம் நடைபெறுவதாக குறிப்பிட்ட எல்-ஹவுட், மக்களிடையே இந்த போக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். இதுபற்றி அவர் பேசுகையில்,"அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரையில் நிகழ்ச்சிகளின் போது துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். அப்போது, துப்பாக்கியை கவனமின்றி சுடுவதால் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

பெய்ரூட் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் மர்ம துப்பாக்கிக்குண்டு பாய்ந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிக்குண்டால் சேதமடைந்த விமானத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

Also Read | "டாக்டர். இளையராஜா..".. இசைஞானிக்கு பட்டம் வழங்கிய பிரதமர் மோடி.! உடனிருந்த முதல்வர் ஸ்டாலின்..!

PLANE, MIDDLE EAST AIRLINES PLANE, BEIRUT, BULLET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்