நாம பண்ற 'தப்பு' இது தான்...! - ஓமிக்ரான் வைரஸ் குறித்து WHO தலைமை மருத்துவர் பகிர்ந்த 'முக்கிய' தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒமைக்ரான் வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அசால்ட்டாக இருக்க கூடாது என உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மருத்துவர் மைக்கேல் ரயான் எச்சரித்துள்ளார்.

Advertising
>
Advertising

கொரோனா வைரஸ் தன்னை தகவமைத்து கொண்டு உருமாறி மேலும் பரவிவருகிறதே தவிர அழிந்தபாடில்லை. கொரோனாவின் டெல்டா வைரஸ் தாக்கம் குறைந்து இப்போது மீண்டும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது.

பல உலக நாடுகளில் அதிகளவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இந்த வைரசால் எந்தவித அசம்பாவிதமும் இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மருத்துவர் மைக்கேல் ரயான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், 'இப்போது அதிகளவில் பரவி வரும் ஒமைக்ரான்  வைரஸ் குறித்து இன்னும் ஆராய்ச்சி அவசியம். தற்போது உள்ள முதற்கட்ட தகவலின்படி பார்க்கும்போது ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸ் போன்று மக்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

ஆனால் இதையே நாம் நினைத்து கொண்டு அசால்ட்டாக செயல்பட்டால் பாதிப்பு அதிகமாகுமே தவிர குறையாது. அதோடு, இந்த ஒமைக்ரான் வைரஸே சிறிது மாறுபாடு அடைந்து தீவிரத் தன்மையை உருவாக்கலாம்.

அதனால், நாம் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் தடுப்பூசிகள் இதுவரை உருவான அனைத்து வகை உருமாறிய கரோனா வைரஸ்களையும் எதிர்கொள்வதில் திறன் கொண்டதாக உள்ளது.

எனவே, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒமைக்ரான் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் அதிகமாக தாக்குகிறது. அதனால், இப்போதைக்கு ஒரே ஒரு பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. முகக்கவசம், சமூக இடைவெளியும் அவசியம்.

கொரோனா வைரஸ் அதன் தன்மையை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. அதன் வீரியத்தில் மாற்றம் இருக்கிறதே தவிர தன்மையில் மாற்றமில்லை. அதனால், இன்னும் எவ்வளவு அலை வரும் என குறிப்பிடமுடியாது' எனக் கூறியுள்ளார்.

OMICRON, OMICRON, MICHAEL RYAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்