ஒற்றை ‘கிருமி’ உலகம் முழுவதும் ‘பரவும்’... முன்பே ‘கணித்த’ மைக்கேல் ஜாக்சன்... ‘ரகசியத்தை’ பகிர்ந்த ‘பாடிகார்டு’...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா போன்ற ஒரு பெரிய நோய் தொற்று வரும் என மைக்கேல் ஜாக்சன் கணித்திருந்ததாக அவருடைய முன்னாள் மெய்க்காப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரபல பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன் கொரோனா போன்ற ஒரு தொற்று வரும் என முன்னரே கணித்திருந்ததாக அவரிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்க் காவலராக இருந்த மேட் ஃபிட்டஸ் என்பவர் தெரிவித்துள்ளார். இகுறித்து தி சன் நாளிதழுக்கு மேட் ஃபிட்டஸ் அளித்துள்ள பேட்டியில், “இதுபோல ஒரு இயற்கைப் பேரழிவு வரும் என முன்னரே மைக்கேல் ஜாக்சன் கணித்திருந்தார். பலர் இதுபோல உயிரிழக்க வேண்டிய சூழல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் எனவும், ஒற்றைக் கிருமி உலகம் முழுவதும் பரவும் எனவும் அவர் கணித்திருந்தார்.

அதன்காரணமாகவே பல்வேறு நாடுகளுக்குத் தொடர்ந்து பயணித்து வந்த அவர் மாஸ்க்கை அணிந்து வந்தார். அதற்காக அவர் கேலி செய்யப்பட்டபோதும் அவர் அந்தப் பழக்கத்தை விடவில்லை. அது பற்றி நான் கேட்டபோதெல்லாம், ‘நான் உடல்நிலை சரியில்லாமல் படுத்து, ரசிகர்களை வருத்தப்பட வைத்துவிடக் கூடாது. நான் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த பூமியில் பிறந்திருக்கிறேன். நான் உடல் நலத்துடன் இருக்க வேண்டும். நான் இன்று யாரையெல்லாம் சந்திப்பேன், என்ன நடக்கும் எனத் தெரியாது’ என அவர் கூறுவார். அவர் அப்போது பயந்தது இப்போது நடந்துவிட்டது என்றே நான் நினைக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

CORONAVIRUS, MICHAELJACKSON, MASK, BODYGUARD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்