'லெபனான் கோர விபத்து'... 'என்னோட மக்களுக்கு எதாவது செய்யணும்'... 'மியா காலிஃபா எடுத்த அதிரடி முடிவு'... பாராட்டிய நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகத்தையே கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ந் தேதி வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்த பெய்ரூட் நகரை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இந்த விபத்தில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த வெடி விபத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர். கட்டடத்தைச் சுற்றி 10 கி.மீ வரை இருந்த அனைத்து கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. வெடிவிபத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் என மக்கள் வீதியில் திரள, ஒட்டுமொத்த அரசும் ராஜிமானா செய்தது.
உலகையே அதிரவைத்த இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் சமூகவலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவரும் முன்னாள் ஆபாசப் பட நடிகையுமான மியா காலிஃபா லெபனான் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். லெபனானை பூர்வீகமாகக் கொண்ட அவர், தனது மக்களுக்கு உதவி செய்ய இது தான் சரியான தருணம் எனக் கூறியுள்ளார். இதற்காகத் தனது அடையாளங்களில் ஒன்றாகக் கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் நிதியை வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காகக் கொடுக்க இருக்கிறார்.
இதற்கிடையே மியா காலிஃபா எடுத்துள்ள இந்த முடிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அவர் ஏலத்தை அறிவித்ததிலிருந்து மியாவின் கண் கண்ணாடியை வாங்குவதற்கு அதிகமான போட்டி நிலவுகிறது. தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இதுகுறித்து “Anything for my country?” என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கஷ்டப்பட்டாலும் நல்லா படிச்சு ஸ்காலர்ஷிப்ல அமெரிக்கா போன பொண்ணு'... 'ஊருக்கு வந்த இடத்தில் நடந்த கொடூரம்'... நிலைகுலைந்த குடும்பம்!
- VIDEO : பெய்ரூட் 'வெடி' விபத்து : அதிர வைத்த சத்தத்திற்கு நடுவே... சேதமடைந்த மருத்துவமனையில்... பூமியில் காலடி எடுத்து வைத்த அதிசய 'குழந்தை'... உருக்கமான 'நிகழ்வு'!!!
- 'நெஞ்சை சுக்குநூறாக்கிய மனைவியின் திடீர் மரணம்'... 'ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் என் மனைவி இருக்கணும்'... ஆசை கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்!
- கடைசி நேரத்தில் 10,000 அடி பறந்து... விபத்துக்கான 'காரணம்' இதுதான்... முதல்கட்ட தகவல் அறிக்கை வெளியானது!
- 'நாங்க கஷ்டப்பட்டாலும் பையன் டாக்டரா திரும்பி வருவான்னு நெனச்சனே'... 'உடைந்து போன மொத்த குடும்பம்'... ரஷ்யாவில் தமிழக மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை!
- "போயிருந்தா என்னாயிருக்கும்.. நல்லவேளை!".. கடைசி நேர ட்விஸ்டால் கோழிக்கோடு விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்!
- 'இரவு 12 மணிக்கு கேக் கட்டிங்'... 'ஜாலியா காரில் வந்த நண்பர்களுக்கு நடந்த கோரம்'... காரின் டிக்கியை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
- 'ஆசையாக தாத்தா காத்திருக்க'... 'தாய் மண்ணை வந்தடைவதற்குள்'... 'முதல் பயணமே இறுதியான சோகம்'... 'கலங்கச் செய்யும் சம்பவம்'...
- 'இன்னும் 15 நாளில் நடக்க இருந்த சந்தோசம்'... 'ரொம்ப நாள் ஆசைப்பட்டது இதுக்கு தான்'... 'மொத்தமா நொறுங்கி போச்சே'... துணை விமானியின் உருகவைக்கும் பக்கங்கள்!
- 'நெஞ்சை உலுக்கிய கோர விபத்து'... 'பிரமை பிடித்தது போல இருந்த 3 வயது குழந்தை'... திக் திக் நிமிடங்கள்!