"மேயருக்கு முதலை கூட திருமணமா??.." பழங்குடி மக்களின் சம்பிரதாயம்.. ஊர் கூடி கொண்டாடிய திருவிழா.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மெக்சிகோ நாட்டின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம், சான் பெட்ரோ ஹவுமெலுவா. இந்த சிறிய நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ  சோசா.

Advertising
>
Advertising

அந்த நகரம் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, பழங்கால சடங்கின் படி, ஒரு வினோதமான சடங்கினை அங்குள்ள மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

மெக்சிகோவின் பாரம்பரிய அறுவடை சம்பிரதாய திருவிழாவான அறுவடை செய்யும் தினத்தை, அறுவடை தினமாக அவர்கள் கொண்டாடும் பழங்கால வழக்கத்தை கொண்டுள்ளனர்.

முதலையுடன் திருமணம்

அதன்படி, அப்பகுதி மேயரான விக்டர், பெண் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டார். அங்குள்ள ஊர் மக்கள் அனைவரும் திரளாக இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். அதே போல, இசை முழங்க, வண்ணமயமாக, வெகு விமரிசையாக இந்த திருமண விழாவும் நடைபெற்றது.

மேலும், இந்த திருமணத்தில் பெண் முதலைக்கு திருமண உடையான வெள்ளை நிற கவுன் ஒன்று அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சில பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த முதலையின் வாய் கட்டப்பட்டிருந்தது. திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக, முதலைக்கு முத்தம் ஒன்றையும் மேயர் விக்டர் கொடுத்தார்.

இது எங்களோட நம்பிக்கை..

திருமணம் குறித்து விக்டர் கூறும் போது, "இயற்கையிடம் மழை, உணவு, மீன் என அனைத்தும் வேண்டி, நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்களின் நம்பிக்கை" என தெரிவித்துள்ளார். இந்த சடங்கினை அப்பகுதியின் பழங்குடி மக்கள், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மெக்சிகோ மக்களின் இந்த வினோதமான திருமண நிகழ்வின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MEXICO, ALLIGATOR, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்