என் மாமியாருக்கு கிட்னிய கூட கொடுத்தேன்.. ஒரே மாசத்துல என் காதலி இப்படி பண்ணிட்டு போவான்னு கனவுல கூட நினைக்கல.. கண்ணீரில் காதலன்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மெக்ஸிகோ: காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த நபருக்கு ஏற்பட்ட துயரத்தை வீடியோ ஒன்றின் மூலமாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

என் மாமியாருக்கு கிட்னிய கூட கொடுத்தேன்.. ஒரே மாசத்துல என் காதலி இப்படி பண்ணிட்டு போவான்னு கனவுல கூட நினைக்கல.. கண்ணீரில் காதலன்
Advertising
>
Advertising

காதலுக்கு கண் இல்லை என்று கூறுவார்கள், ஆனால் இங்கு ஒருவரின் காதலுக்கு சிறுநீரகம் இல்லாமல் போயுள்ளது. காதலுக்காக பல காதலர்கள் நாக்கை வெட்டி கொள்வது முதல் இதயத்தை கொடுப்பது வரை எந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு செல்வார்கள் என்பதை நம் ஊர் சினிமாக்கள் மூலம் பார்த்திருப்போம்.

Mexico man donated a kidney to his girlfriend's mother

அதேபோல் மெக்சிகோவைச் சேர்ந்த காதலன் ஒருவர் தன்னுடைய காதலை நிரூபிக்கும் விதமாக செய்த செயல் அவருக்கே ஆப்படிக்கும் விதமாக மாறியுள்ளது.

ஒரு மாதத்துக்குள் காத்திருந்த அதிர்ச்சி:

மெக்ஸிகோவின் Baja California பகுதியைச் சேர்ந்த Uziel Martinez என்ற ஆசிரியர் தன்னுடைய டிக் டாக்கில் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'நான் என்னுடைய காதலியின் தாயாருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்தேன். ஆனால் நான் தானம் அளித்த ஒரு மாதத்துக்குள் என்னை ஏமாற்றிவிட்டு என் காதலி வேறு நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்' என அவர் கூறியுள்ளார். தன்னுடைய காதலி அம்மாவின் உடல்நிலையை நினைத்து வருந்துகிறாரே என இந்த முடிவை எடுத்துள்ளார்.

இவ்வளவு பிரபலமாகும் என நினைக்கவில்லை:

இந்த விடியோவை எத்தனை பேர் பார்ப்பார்கள் என நினைத்து கூட பார்க்காத நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ தற்போது வரை பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதனால் இதனை பார்த்து தர்மசங்கடம் அடைந்த Uziel Martinez, தனது காதலி மீது தனக்கு வெறுப்பு ஏதும் கிடையாது எனவும் இந்த வீடியோ இத்தனை பேர் பார்க்கும் வகையில் பிரபலமடையும் என நான் எதிர்பார்க்கவில்லை எனவும் வேறொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரல்:

மேலும், அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோ 14 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. Martinezக்கு பலரும் ஆறுதல்களை கூறி தேற்றி வருகின்றனர். சிலரோ காதலியை இப்படி பொதுவெளியில் இப்படி செய்து விட்டீர்களே எனவும் கண்டித்து வருகின்றனர்.

MEXICO, KIDNEY, GIRLFRIEND, MOTHER, காதலி, சிறுநீரகம், மெக்ஸிகோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்