"ரொம்ப நாளா வீட்டிற்கு அடியில் இருந்த 'சுரங்கம்'.. இது எப்படி எனக்கு தெரியாம போச்சு??..." ஷாக்கான 'கணவர்'... இறுதியில் மனைவியால் காத்திருந்த 'பேரதிர்ச்சி'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்மெக்ஸிகோ பகுதியைச் சேர்ந்தவர் அல்பர்ட்டோ (Alberto). கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் அல்பர்ட்டோவுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான வேறொரு பெண்ணுடன் ரகசியமாக உறவு இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து, தனது காதலி பமீலாவை அடிக்கடி சந்திக்க வேண்டி, தனது வீட்டில் இருந்து பமீலா வீட்டிற்கு சுரங்கம் ஓன்றை வீட்டின் அடித்தளத்தில் இருந்து ஆல்பர்ட்டோ அமைத்துள்ளார். பமீலாவின் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில், சுரங்கம் மூலம் வந்து காதலியை ஆல்பர்ட்டோ சந்தித்து தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், திடீரென ஒரு நாள் பமீலாவின் கணவர் சீக்கிரமாக வேலை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது மனைவி வேறொருவருடன் தனிமையில் இருந்ததை கையும் களவுமாக பிடித்துள்ள நிலையில், ஆல்பர்ட்டோ அங்கிருந்த சோஃபா ஒன்றின் பின் மறைந்து பின்னர் காணாமல் போயுள்ளார். அப்போது, பமீலாவின் கணவர் சோஃபா அருகே ஓட்டை ஒன்று இருந்ததை கவனித்த நிலையில், அங்கு ஒரு சுரங்கத்திற்கான வழி இருப்பதையும் கண்டுள்ளார்.
பின்னர், அதன் வழி இறங்கி நடந்து சென்ற போது, அந்த சுரங்கம் ஆல்பர்ட்டோவின் வீட்டிற்கு சென்றுள்ளது. அங்கு சென்று ஆல்பர்ட்டோவிடம் அந்த பெண்ணின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து உடனடியாக கிளம்ப வேண்டும் என்றும், தனது மனைவிக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் ஆல்பர்ட்டோ கெஞ்சியுள்ளார். ஆனாலும், அந்த கணவர் உடன்படாத நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். காதலியைக் காண இரு வீட்டுக்கு இடையே சுரங்கம் ஒன்றை நபர் அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO : "நான் இங்க பேசிட்டு இருக்கேன் மா",,.. வீடியோ காலில் பெண் 'அரசியல்வாதி' செஞ்ச 'வேலை'... வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'!!!
- அமெரிக்காவில் பரபரப்பு!.. 'மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுறோம்னு'... தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு புதிய சிக்கல்!
- 'ஒரே பிரசவத்தில் 3 பிஞ்சுகள்'... 'சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்த அப்பா'... 'நொடியில் இடியாய் வந்த செய்தி'... உலகம் கொடுத்த கொடூர தண்டனை!
- "புரட்டிப் போட்ட திடீர் நிலநடுக்கம்!".. "அடுத்து சுனாமி வரப்போகுது".. எச்சரிக்கையால் 'பதறிக் கொண்டிருக்கும்' நாடு!
- ‘26 பைகளில் மனித உடல்கள்’.. கொரோனாவுக்கு மத்தியில் அரங்கேறிய கொடூரம்.. உலகை அதிரவைத்த கொலைகள்..!
- 'மூன்றே' மாதத்தில்... 1000 பெண்கள் 'கொலை'... அந்த 'நாட்டுல' என்ன தான் நடக்குது?
- ஒரே மாதத்தில் 3 ஆயிரம் பேர் பலி!.. கொரோனா ஊரடங்கு காலத்தில்... அரசாங்கத்தை விரட்டும் அட்டூழியம்!.. அலறும் மெக்சிகோ!
- 'போதும் சாமி...' 'உங்க கிட்ட பீர் வித்தது போதும்...' எந்த நேரத்துல 'பேர் வச்சமோ' தெரியல... 'கடையை சாத்தும்' பிரபல 'பீர்' கம்பெனி...
- "மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புங்கள்..." 'இது போன வாரம்...' "அமெரிக்காவிலிருந்து யாரும் மெக்சிகோவிற்குள் வரக்கூடாது..." 'இது இந்த வாரம்...' 'மாறிய வரலாறு...'
- "பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் தெரியுமா?..." "நிஜமாகவே செய்து காண்பித்த பெண்கள்..." ஒரே ஒருநாள் தான்... ஸ்தம்பித்துப் போன நகரம்...