வாட்சப்பில் பரவிய வதந்தி.. உண்மை என்னன்னு தெரியாமல் வன்முறையில் இறங்கிய மக்கள்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வாட்சப்பில் பரவிய வதந்தியை உண்மை என நம்பி, இளம் அரசியல் ஆலோசகரை மக்கள் கொலை செய்திருப்பது மெக்சிகோ முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ரூமில் காதலியுடன் இருந்த கணவன்..உறவினர்களுடன் சென்று கதவை தட்டிய மனைவி.. கொஞ்ச நேரத்துல நடந்த களேபரம்..!

நம்முடைய வாழ்வில் சமூக வலை தளங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. மக்கள் இதன்மூலம் பல்வேறு விதமான தகவல்களை பெறுகிறார்கள். இது ஒருபுறம் என்றால் தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்களை சில விஷமிகள் சமூக வலை தளங்களில் பதிவிடுவதையே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். இதனால் சமூக அமைதி கெடுவதோடு, சில நேரங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த டேனியல் பிகாசோ என்னும் இளம் அரசியல் விமர்சகர் அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்

மெக்சிகோவின் லெஜிஸ்லேட்டிவ் சேம்பர் ஆஃப் டெப்யூட்டியில் ஆலோசகராகப் பணியாற்றியவர் டேனியல் பிகாசோ. இந்நிலையில் இவர் குறித்து சமீபத்தில் வாட்ஸப்பில் வதந்தி ஒன்று பரவியிருக்கிறது. அதில் பிகாசோ ஒரு குழந்தை கடத்தல்காரர் என குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து மெக்சிக்கோவின் Papatlazolco பகுதியில் ஏராளமான மக்கள் பிகாசோவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் மக்கள் கூட்டம், பிகாசோவை கடுமையாக தாக்கியுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இது அநீதியான செயல் என அப்பகுதி நகராட்சி தெரிவித்திருக்கிறது. மேலும், சமீப காலங்களில் வாட்சப்பை நம்பி போராட்டத்தில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரிபார்ப்பு

பொதுமக்கள் சமூக வலை தளங்களில் வரும் செய்திகளை அப்படியே நம்பாமல், அது சரியான கூற்றுதானா? என்பதையும் சரிபார்க்க வேண்டும் என Papatlazolco பகுதி நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுபற்றி பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர்,"கடந்த வெள்ளிக்கிழமை பிகாசோ தாக்கப்பட்டது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை காப்பாற்றி ரோந்து வாகனத்தில் அமர வைத்தோம். ஆனாலும் வன்முறையில் இறங்கிய மக்கள் அவரை தொடர்ந்து தாக்கத் துவங்கினர்" என்றார்.

மெக்சிகோவில் வாட்சப் வதந்தியை உண்மை என நம்பி கலவரத்தில் ஈடுபட்ட கும்பல், இளம் அரசியல் ஆலோசகரை கொலை செய்திருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | 30 ஆயிரம் அடி உயரத்துல பறந்தபோது விமானத்துக்குள்ள பெய்த மழை.. உறைந்துபோன பயணிகள்..!

MEXICAN, MEXICAN POLITICIAN, ATTACK, WHATSAPP RUMOURS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்