'கூட்றா பஞ்சாயத்த... இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு பார்க்காம விட்றதில்ல!'... கடுப்பான நெட்டிசன்கள்... 3 வது முறையாக... தொடரும் மர்மம்!.. ஏலியன்ஸ் சம்பவம்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரோமானியா, உடாவை தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மலை உச்சியிலும் மர்மமான முறையில் உலோகத்தூண் (Metal Monolith) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரோமானியா, உடா பாலைவனம் ஆகிய இடங்களில் இதே போன்ற தூண்கள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அத்தூண்கள் மர்மமான முறையில் மாயமாகின. அவற்றை யார் வைத்தனர், பின்னர் யார் எடுத்து சென்றனர் எனத் தெரியாததால், இதன் பின்னணியில் வெளிகிரக வாசிகள் இருக்கலாம் என சிலர் சந்தேகம் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் கலிபோர்னியாவில் 10 அடி உயர தூண் புதன்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் வேகமாக பரவவே அதன் அருகே நின்று பலர் செல்பி எடுத்த நிலையில், புதன்கிழமை இரவில் காணாமல் போய் விட்டது.

இதுகுறித்து கலிபோர்னியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்