30 வருஷம் யாராலுமே தொட முடியாத மாஃபியா மன்னன்.. கடைசில சுலபமா சிக்கிய சம்பவம்.. இதை யாருமே எதிர்பார்க்கல..!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் 30 வருடங்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நபரை மிக எளிதான முறையில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Also Read | ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்த பிரிட்டோரியா கேபிடல்ஸ்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு விக்கெட்..!
இத்தாலியை சேர்ந்தவர் மதேயோ மெஸினா டெனேரோ. 14 வயது முதல் வன்முறை வழக்குகளில் இவர் பெயரும் அடிபட துவங்கி இருக்கிறது. இவருடைய தந்தையும் ஒரு மாஃபியா கும்பலை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. 20 வயதில் தனித்து இயங்கிய மதேயோ, தனக்கு போட்டியாக இருந்த கும்பல்களை கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, தனக்கென ஒரு கூட்டத்தை மதேயோ அமைத்து மிகப்பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தையும் நடத்தி வந்திருக்கிறார்.
இதனிடையே, தென்னமெரிக்க நாடுகளிலும் மதேயோ-வின் செல்வாக்கு அதிகரிக்க துவங்கி இருக்கிறது. அதனுடன் இவர் பற்றிய குற்ற பின்னணியும். இதனால் இத்தாலியின் தேடப்படும் குற்றவாளியாக மதேயோ அறிவிக்கப்பட்டிருக்கிறார். அது துவங்கி பல நாட்டு காவல்துறை மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை கைது செய்ய முயற்சித்தனர். ஆனாலும், அவரை நெருங்க முடியவில்லை. இதற்கு காரணம் தென்னமெரிக்க நாடுகளில் அவருக்கு இருந்த அதீத செல்வாக்கு தான் என சொல்லப்படுகிறது.
1993ஆம் ஆண்டில் ரோம், மிலன், ப்ளாரன்ஸ் ஆகிய நகரங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளிலும் மதேயோ-விற்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் அப்போது மிகப்பெரிய அளவில் தேடுதல் வேட்டையும் நடைபெற்றது. ஆனாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் மதேயோ-வின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளில் மோசமடைந்திருக்கிறது. இதனால் மருத்துவ சிகிச்சை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மதேயோ இத்தாலியில் உள்ள சிசிலி மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவரவே அவருக்கு வலை வீசி காத்திருந்தனர். வழக்கமான பரிசோதனைக்காக வந்த இடத்தில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரை கைது செய்து வெளியே அழைத்துச் செல்லும்போது அங்கிருந்த மக்கள் கைதட்டி ஆராவரம் செய்திருக்கின்றனர்.
30 வருடங்களாக யாராலுமே நெருங்கமுடியாத மாஃபியா மன்னனாக திகழ்ந்த மதேயோவை எளிதாக போலீசார் கைது செய்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இங்க இருந்த ஏரி எங்கப்பா".. 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. உலக புகழ்பெற்ற ஏரியை கண்ணீருடன் கடக்கும் சுற்றுலாவாசிகள்..!
- "மொத்தமா 1000 பவுண்டு இருந்துருக்கு.." ஆற்றில் மீனவர் கண்ட 'விஷயம்'.. வறட்சிக்கு மத்தியில் இத்தாலியில் உருவான 'பதற்றம்'!!
- "எவ்ளோ ரிஸ்க் தெரியுமா??.." பள்ளத்தில் விழுந்த போன்.. அடுத்த கணமே சுற்றுலா பயணிக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'
- "அந்த தீவுக்கு மட்டும் போய்டாதீங்க".. தொடர்ந்து எச்சரிக்கும் அரசு.. மறைக்கப்பட்ட மர்ம தீவில் நடந்த விபரீதங்கள்.. நெஞ்சை உறையவைக்கும் வரலாறு..!
- பாக்கவே செம்மையா இருக்கே.. வானத்திலிருந்து தரையிறங்கும் வெள்ளை மயில்.. வைரல் வீடியோ..!
- “எங்க ஊர்ல கல்யாணம் பண்ணா..1.67 லட்சம் தர்றோம்"... வித்தியாச ஆஃபரை அறிவித்த நகரம்..!
- அதிரடி செக்! இனி இந்த 13 நாடுகள் வழியா ரஷ்ய விமானம் பறக்க முடியாது - சூடு பிடிக்கும் உலக அரசியல் சதுரங்கம்!
- 2 வருஷமா மேஜையில் உட்கார்ந்தபடியே.. இப்படி ஒரு காட்சியை யாரும் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது.. மனசாட்சியை உலுக்கும் சம்பவம்
- இந்த ஒற்றை புகைப்படம் எவ்ளோ பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிடுச்சு! அந்த போட்டோகிராபர் நல்லா இருக்கணும்
- 'பறவைக் கூட்டத்தில் மோதிய விமானம்...' திடீர்னு எஞ்சின்ல இருந்து...' - பதறிப்போன 'விமானி' செய்த காரியம்...!