கொரோனாவை பத்தி செய்தி வந்ததும் மக்கள் விழுந்து விழுந்து தேடுன ‘ஒரே’ வார்த்தை.. இந்த வருசம் அதுதான் ‘டாப்’!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த ஆண்டு மக்களால் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை எதுவென மெரியம் வெப்ஸ்டர் என்ற இணையதள அகராதி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இணையதள அகராதி நிறுவனமான மெரியம் வெப்ஸ்டர் (Merriam-Webster), ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக தேடப்படும் வார்த்தையை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அந்த அகராதியில் பாண்டமிக் (pandemic) என்ற வார்த்தையை அதிகம் பேர் தேடியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா முதன் முதலாக கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்தபோது, மார்ச் மாதம் 11ம் தேதி அதனை பெருந்தொற்று (பாண்டமிக்) என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அந்த ஒரு நாளில் மட்டுமே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பாண்டமிக் வார்த்தையை தேடி பார்த்தனர்.
பாண்டமிக் (pandemic) என்பது கிரேக்க வார்த்தையாகும். pan என்பது அனைத்து அல்லது ஒவ்வொன்று, demic என்பது மக்கள் என்பதை குறிக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. சில நேரங்களில் ஒரு சொல் சகாப்தத்தை உருவாக்கிவிடுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ல் இந்த அகராதியில் ‘அவர்கள்’ என்ற வார்த்தையும். 2018ல் ‘நீதி’ என்ற வார்த்தையும், 2017-ல் ‘பெண்ணியம்’ என்ற வார்த்தையும் அதிகமாக தேடப்பட்டுள்ளதாக மெரியம் வெப்ஸ்டர் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘100% பலனளிக்கும் கொரோனா தடுப்பூசி’... ‘அவசர பயன்பாட்டிற்கு அனுமதியுங்க’... ‘கொரோனா மருந்து தயாரிப்பு நிறுவனம்’... ‘அளித்த முக்கிய தகவல்’...!!!
- 'எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அனுப்பியாச்சு...' 'புதுசா யாருக்குமே பாசிடிவ் இல்ல...' - தமிழகத்தில் கொரோனா இல்லாத 'இரு' மாவட்டங்கள்...!
- 'தமிழகத்தின் இன்றைய (30-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'நோயே பரவாதப்போ'... 'இதுமட்டும் எப்படி சாத்தியம்???'... 'அதுவும் பிறக்கும்போதே'... 'வியப்பில் மருத்துவர்கள்!!!'...
- 'இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக'... 'கோவிஷீல்டு தடுப்பூசியை கொண்டுவர முயற்சி?!!'... 'முக்கிய விவரங்களை பகிர்ந்த சீரம் CEO!!!'...
- தமிழகத்தில் ‘ஊரடங்கு’ நீட்டிப்பு.. புதிய தளர்வுகள் என்னென்ன?.. முதல்வர் ‘முக்கிய’ அறிவிப்பு..!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'கொரோனா தடுப்பூசியே வந்தாலும்’... ‘இதை கட்டாயம் செய்யணும்’... 'இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்’...!!!
- 'தடுப்பூசி சோதனைக்கு நடுவே'... 'அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள சென்னை தன்னார்வலர்!!!'... 'ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்டு அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!'...
- 'கொரோனா முதல்முதலா உருவானதே இந்தியாவுல தானா???'... 'பகீர் கதையைக் கூறி'... 'பரபரப்பை கிளப்பியுள்ள சீன ஆய்வாளர்கள்!!!'...