'இது என்ன பா தாடிக்கு வந்த சோதனை'...அதிகமா 'தாடி வச்சிக்கிட்டா'...இந்த ஆபத்தெல்லாம் இருக்கு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாடி என்பது ஆண்களுடைய அடையாளத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது.அது அவர்களுக்கு கம்பீரதையும் லுக் கூல் தோற்றத்தையும் அளிக்கிறது.பெண்களுக்கும் தாடி வைத்த ஆண்களை தான் அதிகம் பிடிக்கும் என்ற கூற்றும் உண்டு.ஆனால் தற்போது தாடி குறித்து வந்திருக்கும் ஆய்வு,தாடி வைத்திருப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சமீபத்தில் வேறொரு நோக்கத்திற்காக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தாடி குறித்து வந்திருப்பது தான் இதில் வேடிக்கை.MRI ஸ்கேன் செய்யப்படும் இயந்திரங்களை மனிதனுக்கும் நாய்க்கும் ஒன்றாகப் பயன்படுத்தும்போது நாய்கள் மூலமாகப் பரவும் நோய்கள் ஏதேனும் தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியவே அந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதற்காக 18 தாடி வைக்கப்பட ஆண்கள் மற்றும் கழுத்துக்குக் கீழ் அதிக முடி கொண்ட 30 நாய்களை ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளனர்.

ஆனால் அந்த ஆய்வு முடிவுகள் தான் ஆராச்சியாளர்களை அதிர வைத்துள்ளது.ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட 30 நாய்களில் 23 நாய்களுக்கு அதிக அளவிலான தொற்றுக் கிருமிகள் இருந்துள்ளன. ஆனால் அந்த ஆய்வில் பங்கேற்ற ஆண்களில் 18 பேருக்குமே தாடியில் அதிக அளவிலான நோய்த் தொற்றுக் கிருமிகள் இருந்துள்ளன. அதுவும் அந்த தாடியில் உள்ள கிருமிகளே அவர்களுக்கு உடல் ரீதியான நோய்களை உருவாக்கும் ஆபத்து அதிகம் இருந்துள்ளது.

அதேபோல் MRI ஸ்கேன் இயந்திரத்திலும் நாய்களைக் காட்டிலும் ஆண்களைப் ஸ்கேனிற்கு உட்படுத்திய பின்தான் அதிக பரவும் கிருமிகளைக் கண்டறிந்துள்ளனர். இது அவர்களுக்கே அதிர்ச்சியாக அமைந்துள்ளது.இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ஆண்ட்ரீஸ் கட்ஸெய்ட் கூறுகையில் ,’ஆராய்ச்சியில் அதிக அளவிலான கிருமிகளை நாயின் முடியைக் காட்டிலும் ஆண்களின் தாடியிலிருந்துதான் கண்டறிந்துள்ளோம்.ஆக முடிவுகளின் படி நாய்கள் சுத்தமாக இருக்கின்றன. தாடி வைத்த ஆண்கள்தான் சுத்தமாக இல்லை. அவர்களால்தான் நாய்க்கு நோய் வரும் ஆபத்து இருக்கிறது“ என்று கூறியுள்ளார்.

எனவே அழகாக தாடி வளர்ப்பது மட்டும் முக்கியமல்ல,அதனை ஆரோக்கியமாக பராமரிக்கும் போது மட்டும் தான் பல நோய்களிலிருந்து தப்பிக்க முடியும்.

BEARDED MEN, MICROBES, DOGS, HIRSLANDEN CLINIC NEAR ZURICH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்