"உலகின் மிகப்பெரிய நன்னீர் திருக்கை மீன்".. வலை வீசிய கிராமத்தினருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்..எடையை பார்த்து மிரண்டுபோன மக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கம்போடியா நாட்டில் உலகின் மிகப்பெரிய நன்னீர் மீனை பிடித்திருக்கிறார்கள் கிராம மக்கள். தற்போது இந்த மீனின் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | சவூதியில் மரணமடைந்த தமிழர்.. கவலையில் இருந்த குடும்பத்துக்கு 30 நாளுக்கு அப்பறம் வந்த அடுத்த ஷாக் நியூஸ்..!

தெற்காசிய நாடான கம்போடியாவின் கோ பிரே தீவு அருகே உள்ள மீகாங் ஆறு, மிகப்பெரிய மீன் மூலமாகும். இங்குள்ள மக்கள், இந்த ஆறில் கிடைக்கும் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆற்றில் சமீபத்தில் கிராம மக்கள் வலை வீசும்போது பிரம்மாண்ட திருக்கை மீன் சிக்கியுள்ளது. இதுவரையில் பிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய நன்னீர் மீன் இதுதான் என அறிவித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பிரம்மாண்ட மீன்

கிராமத்தினர் வீசிய வலையில் சிக்கிய இந்த திருக்கை மீன் 300 கிலோ எடை இருந்திருக்கிறது. 4 மீட்டர் நீளம் இருந்த இந்த மீனில் எலெக்ட்ரானிக் டிராக்கிங் கருவி ஒன்றை பொருத்தியுள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். பெண் மீனான இது கிறிஸ்டென்ட் போராமி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு முழு நிலவு என்று பொருளாம். குமிழ் வடிவத்தில் இந்த மீன் காணப்படுவதால் இந்த பெயரை சூட்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனின் தொடர் நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறையை ஆராயும் நோக்கில் அதன் உடலில் டிராக்கிங் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். மேலும், உலகின் மிகப்பெரிய நன்னீர் மீனை பாதுகாக்கும் நோக்கில் இந்த மீன் மீண்டும் நீரில் விடப்பட்டிருக்கிறது.

உயிரியலாளர் ஜெப் ஹோகன் இதுபற்றி கூறுகையில், "இது மிகவும் உற்சாகமான செய்தி, ஏனெனில் இது உலகின் மிகப்பெரிய மீன். மீகாங் ஆறு இன்னும் மீன்கள் வாழ தகுதியுடையதாக இருப்பதற்கு இந்த தருணம் ஒரு சான்றாகும். இது உயிரியலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது" என்றார்.

மீகாங், உலகின் மூன்றாவது அதிக மீன் எண்ணிக்கையை கொண்டுள்ள நதியாகும். இந்த நதியின் ஆணையத்தின்படி, அதிகப்படியான மீன்பிடித்தல், மாசுபாடு, உப்பு நீர் ஊடுருவல் மற்றும் வண்டல் குறைவு ஆகியவை இந்த நதியின் வளமையை பாதிக்கின்றன. இருப்பினும், நதியின் சுற்றுச்சூலை பாதுகாக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Also Read | "11 ஆயிரம் பேர் தங்கலாம்.. 20 ஆயிரம் டன் வெயிட்டு".. பயன்பாட்டுக்கு வரும் முன்பே சல்லி சல்லியாய் உடைக்கப்பட இருக்கும் பிரம்மாண்ட சொகுசு கப்பல்.!

MEKONG VILLAGERS, FRESHWATER FISH, BATOIDEA, திருக்கை மீன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்