'எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்...' 'சண்டை வேண்டாம்...' என்ன சொல்றீங்க...? 'வீடியோ காலில் நடந்த உரையாடல்...' - சீன அதிபர் 'என்ன' சொன்னார் தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபரும் சீன அதிபரும் காணொளி வாயிலாக நடைபெற்ற சந்திப்பு சர்வதேச ஊடக கவனம் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்க் கடந்த திங்கள் கிழமையன்று காணொளி மூலம் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து வருவதால் இம்முறையும் இந்த சந்திப்பு காணொளியில் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது பைடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அறிவுறுத்தும் விதமாக 'நம்முடைய இரு நாடுகளுக்குள் போட்டிகள் இருக்கலாம். ஆனால், இது ஒரு போதும் தெரிந்தோ, தெரியாமலோ மோதலாக மாறிவிடக் கூடாது. எதிர்காலத்தில் நம் இரு நாடுகளுக்கிடையே எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாம் வெளிப்படையாக விவாதம் நடத்திக் கொள்ளலாம்' எனக் கூறியுள்ளார்.

அதன்பின் தன் பேச்சை தொடங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங், 'எனது பழைய நண்பரான பைடன் நன்றாக இருக்கிறார் என நம்புகிறேன். அமெரிக்கா, சீனா என இரு பெரும் வல்லரசுகளுக்கும் இடையே இன்னும் சிறப்பான தொடர்புநிலை உருவாக வேண்டும். சீனாவும், அமெரிக்காவும் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் மேம்படுத்த வேண்டும்' என பேசியுள்ளார்.

2 மணி நேரம் நடைபெற்ற இந்த உரையாடலில் சீனா, தைவான் மோதல் வலுவடைந்துவிடக் கூடாது என்ற அக்கறையை அமெரிக்கா வெளிப்படுத்தியதாகவும், கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற கூட்டத்தில் சீன அதிபர் கலந்து கொள்ளாததற்கு பைடன் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். அதேபோல், ரோம் நகரில் நடந்த ஜி-20 மாநாட்டில் சீனா பங்கேற்காததற்கும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முக்கியமாக வெளியுறவுக் கொள்கைகளில் தவறான கணிப்புகளை தவிர்த்துக்கொள்ள ஏதுவாக அமெரிக்கா, சீனா பொதுவான ஒரு பாதுகாப்பு அம்சத்தை வகுக்க வேண்டும் என்ற முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

JOE BIDEN, XI JINPING, VIDEO CHAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்