கைதானா கூட இவங்க கையால கைதாகணும்.. உலகின் அழகான போலீஸ் என நெட்டிசன்கள் கொண்டாடும் அதிகாரி.!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் அழகான போலீஸ் என நெட்டிசன்களால் அழைக்கப்படும் இளம்பெண் அதிகாரியின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
தென்னமெரிக்க கண்டத்தில் இருக்கிறது கொலம்பியா தேசம். இங்குள்ள மெடலின் நகரத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் டயானா ராமிரெஸ். உலக அளவில் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் கொலம்பிய தேசத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார் இந்த இளம் போலீஸ் அதிகாரி.
இணையத்திலும் ஆக்டிவாக இயங்கிவரும் டயானா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இவரது பதிவுகளில் ஹார்டின்களை பறக்க விடும் நெட்டிசன்கள் இவரை உலகின் அழகான போலீஸ் என்று கமெண்ட் போடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தனது போலீஸ் வேலையை தான் மிகவும் விரும்புவதாகவும் மாடலிங் துறையில் தனக்கு ஆர்வம் இல்லை எனவும் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் டயானா. இதுபற்றி அவர் பேசுகையில்,"எனக்கு மாடலிங் மற்றும் அழகி போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வம் இல்லை. சொல்லப்போனால், பகுதி நேரமாக மாடலிங் செய்யும் எண்ணம் கூட எனக்கு இல்லை. ஒருவேளை எனது வாழ்க்கையை மாற்றியமைக்க மறுபடி ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால் கூட நான் போலீஸ் வேலையையே தேர்ந்தெடுப்பேன். அரசாங்கம் எனக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளது. நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். எனது பணியை நான் நேசிக்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
உள்ளூரில் நடைபெறும் இன்ஸ்டாஃபெஸ்ட் எனும் விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த போலீஸ் அல்லது ராணுவத்தில் தாக்கம் ஏற்படுத்தியவருக்கான பட்டியலில் டயானாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அவர்,"என்னைப் பொறுத்தவரை, இதன் மூலம் காவல்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்த மரியாதை. நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் உழைக்கும் மற்றும் ஒரு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும் ஒவ்வொருவரின் பணியையும் அர்ப்பணிப்பையும் சமூக ஊடகங்களின் இந்த செயல்பாடுகள் காட்டுகின்றன" என்றார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டயானாவை சுமார் 4 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பதிவிடும் புகைப்படங்கள் சில நிடங்களிலேயே உலக அளவில் ட்ரெண்டும் ஆகிவிடுகின்றன. நெட்டிசன்கள் பலர், "கைதானால் இப்படியான ஒரு அதிகாரியிடம் கைதாக வேண்டும்" என அப்பதிவுகளில் விடாமல் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
Also Read | “ட்விட்டரை என்கிட்ட கொடுங்க”... கோரிக்கை வச்ச பிரபல தொழிலதிபர்.. ஒரே வார்த்தையில் மஸ்க் போட்ட கமெண்ட்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- யாசகம் பெறுபவர்களின் குழந்தைகளுக்கு ஸ்கூல்.. சொந்த பணத்தை வச்சு 50 குழந்தைகளை காப்பாற்றும் காவல்துறை அதிகாரி.. குவியும் பாராட்டுகள்..!
- 100 வருசத்துக்கு முன்னாடி மூழ்கிய கப்பலில் ‘தங்கப்புதையல்’.. இதோட மதிப்பு இத்தனை கோடியா..? மிரண்டு போன ஆய்வாளர்கள்..!
- 200 நாடுகளால் தேடப்படும் டான்.. கடைசில மாடல் பேச்சை கேட்டு போலீஸ்ல மாட்டிக்கொண்ட சம்பவம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஃபோட்டோ தானாம்..!
- Andhra Pradesh: பெண் காவலர்களின் சீருடைக்கு அளவெடுத்த ஆண் ஊழியர்கள்.. பரபரப்பு வீடியோவால் பாய்ந்த நடவடிக்கை?
- தேங்காய் எல்லாம் ஒரு திணுசா இருக்கே.. சந்தேகப்பட்டு உடைத்துப் பார்த்த அதிகாரிகள்.. காத்திருந்த பெரிய ஷாக்..!
- 20 நிமிஷம் 'போனில்' பிஸி!!.. விபத்து நோயாளிக்கு நேர்ந்த சோகம்!.. டாக்டருடன் அனல் பறக்க சண்டையிட்ட சப் இன்ஸ்பெக்டர்!
- “ரவுடி வீசிய நாட்டு வெடிகுண்டு!”.. தலையில் பட்டு பலியான காவலர்.. பணிக்கு சேர்ந்த 3 ஆண்டுகளில்.. தமிழகத்தை உலுக்கிய சோகம்! எப்படி நடந்தது?
- ‘திடீரென’ வெடித்துச் ‘சிதறிய’ பேருந்து... ‘அருகே’ சென்றதால் சிக்கிக் கொண்ட ‘கார்கள்’... கோர விபத்தில் சிக்கி ‘7 பேர்’ பலியான பரிதாபம்...
- 'தமிழகத்தை உலுக்கிய கொடூரம்'... 'சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டு கொலை' ...வெளியான சிசிடிவி காட்சிகள்!
- ‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிக்கு ’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..