உலகத்தின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் சோகத்துடன் போட்ட ட்வீட்.. உடனே மஸ்க்கின் அம்மா போட்ட கமெண்ட்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் செய்த ட்வீட்டிற்கு அவரது தயார் போட்ட கமெண்ட் தற்போது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | குகையில் இருந்து ஒரே நேரத்துல பறந்த கோடிக்கணக்கான வௌவால்கள்.. பாத்தாலே மெர்சல் ஆகுதே.. வைரலாகும் வீடியோ..!

எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

ட்வீட்

எப்போதும் எலான் மஸ்க் பற்றிய புதுப்புது தகவல்கள் இணையத்தில் வெளிவந்து வைரலாவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சமீபத்தில் எலான் மஸ்க் தனது நெருங்கிய நண்பர் ஒருவருடைய மனைவியுடன் நெருக்கமாக பழகி வருவதாக தகவல்கள் வெளியாகின. இது உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்ட நிலையில், மஸ்க் இதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறார்.

இந்நிலையில் எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"என் மீது ஏற்படும் கவனம் சூப்பர்நோவா போல எழுந்துள்ளது. இது என்னை உள்ளே இழுக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, என்னைப் பற்றிய அற்பமான கட்டுரைகள் கூட நிறைய கிளிக்குகளை பெறுகின்றன. இருப்பினும் மனித குலத்திற்கு பயனுள்ள விஷயங்களைச் செய்வதில் கவனம் செலுத்துவதற்கு என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கமெண்ட்

இந்நிலையில், மாடலும் பிரபல எழுத்தாளருமான எலான் மஸ்க்கின் தாய் மேயி மஸ்க் இந்த பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். அதில்,"உன்னைப் பற்றிய நேர்காணல்களுக்காக எனது மேனேஜர்களுக்கு வரும் ஊடகங்களின் மின்னஞ்சல்கள் மற்றும் அழைப்புகளின் எண்ணிக்கை சூப்பர்நோவா ஆகிவிட்டது. என் வார்த்தைகளை திரிக்க வழி தேடுகிறார்கள். ஒருபோதும் அதனை செய்யப் போவதில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Also Read | "நண்பரின் மனைவியுடன் ரகசிய உறவா??.." சர்ச்சையை உண்டு பண்ணிய செய்தி.. எலான் மஸ்க் சொன்னது என்ன?

ELON MUSK, MAYE MUSK, ELON MUSK POST, ELON MUSK MOTHER MAYE MUSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்