"தூங்குனா போதும்.. சம்பளம் தர்றோம்".. திகைக்க வச்ச நிறுவனத்தின் Job ஆஃபர்.. படையெடுக்கும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க மெத்தை தயாரிப்பு நிறுவனம் ஒன்று நன்றாக தூங்க கூடியவர்களுக்கான பணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது நெட்டிசன்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "நான் ரத்தன் டாடா பேசுறேன்" ..இளம் தொழிலதிபரின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஒரு போன்கால்.. என்ன மனுஷன்யா..!

தூக்கம்

ஆரோக்கியமான உடலுக்கு நல்ல உறக்கம் தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். தூக்கம் குறைந்தால் அதுவே பல உடல் மற்றும் உளவியல் சிக்கலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், தூங்குவதற்கு சம்பளம் கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதான் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று இத்தகைய அறிவிப்பை தான் வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

நிபுணர்கள் தேவை

அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாகக்கொண்டு இயங்கி வருகிறது கேஸ்பர் நிறுவனம். படுக்கை மெத்தைகளை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தூக்க நிபுணர்களுக்கான பணியிடம் தங்களது நிறுவனத்தில் காலியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. தூக்கத்தில் என்ன நிபுணர்கள்? என்ற கேள்விக்கும் பதில் சொல்லியிருக்கிறது இந்த நிறுவனம். அதாவது என்ன சூழ்நிலையிலும் தூங்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என அந்நிறுவனம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

அதுமட்டும் அல்லாமல் தூங்கும் நேரம் தவிர்த்து பிற நேரங்களில் தங்களது தூக்க அனுபவம் குறித்து டிக்டாக் பாணியில் வீடியோக்களை வெளியிட வேண்டும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. விண்ணப்பிப்போர் தங்களது டிக்டாக் பக்கத்தின் லிங்கையும் இணைக்கும்படி அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கண்டீஷன்

தூக்க நிபுணர்களுக்கு சில கண்டீஷன்களையும் விதித்திருக்கிறது இந்த நிறுவனம். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், தங்களது ஸ்டோரில் எந்த சூழ்நிலையிலும் தூங்குபவர்களாக இருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சில சிறப்பு சலுகைகளும் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. அதாவது, இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பைஜாமா அணிந்து வேலைக்கு வரலாம் எனவும் நிறுவனத்தின் பிற தயாரிப்புகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த வேலைக்கு விண்ணப்பிப்போர் நியூயார்க்கை சேர்ந்தவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் ஆனால் இது கட்டாயமில்லை எனவும் அந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கேஸ்பர் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read |CWG 2022: 56 நாடுகள் வாங்குன பதக்கத்தை விட இவங்க அதிகமான மெடல் வாங்கிருக்காங்க.. யாருப்பா இந்த எம்மா மெக்கியோன்.?

MATTRESS, MATTRESS FIRM, PROFESSIONAL NAPPERS

மற்ற செய்திகள்