‘டவுட் கேட்ட 6-ம் வகுப்பு மாணவி’... ‘வித்தியாசமாக வீட்டுக்கே வந்து’... ‘கணிதப் பாடம் நடத்திய ஆசிரியர்’... 'புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா ஊரடங்கால் உலகமே கவலைக்குரிய இந்தச் சூழ்நிலையிலும் உலகில் மனிதநேயத்தைக் காட்டும் செயல்களும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்த வண்ணம்தான் உள்ளன.

அமெரிக்காவில் உள்ள மேடிசன் எனும் பகுதியைச் சேர்ந்த 6-வது கிரேடு படிக்கும் ரைலி ஆண்டர்சன் (Rylee Anderson) என்ற சிறுமி வீட்டில் இருந்தபடி படித்து வந்துள்ளார். அவரால், கணிதப்பாடத்தில் வந்த ஒரு கணக்கை சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, தனது கணித ஆசிரியருக்கு மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் கிறிஸ் வாபா (Chris Waba) மின்னஞ்சலில் பதிலளித்தும் சிறுமிக்கு புரியாத காரணத்தால் நேரடியாக அவருடைய வீட்டுக்கே சென்றுள்ளார். சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் ஆசிரியர் வித்தியாசமான முறையில் சிறுமியின் சந்தேகத்தை தீர்ப்பதற்காக, வெள்ளைப் பலகையை சிறுமியின் வீட்டுக்கு முன்பு வைத்துள்ளார். சிறுமி வீட்டின் வாயிலில் இருந்த கண்ணாடி கதவுக்குப் பின்னால் நின்றுள்ளார்.

இப்படியான சூழலில் சிறுமிக்கு கணிதப்பாடத்தை நடத்தியுள்ளார். சிறுமியின் தந்தையான ஜோஷ் ஆண்டர்சன் இந்தக் காட்சியை புகைப்படத்துடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ``என் மகள் ஆறாம் வகுப்பு படிக்கிறார். கணிதப்பாடத்தில் ஏற்பட்ட சந்தேகம் குறித்து அவரது ஆசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அவர் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தியுள்ளார்” என்று கேப்ஷனில் எழுதியுள்ளார். இவரின் பதிவு நெட்டிசன்களை அதிகமாகக் கவர்ந்துள்ளது.

``டீச்சர் ஆஃப் தி இயர், இப்படியான ஆசிரியர்கள் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர்கள், விலைமதிப்பற்ற ஆசிரியர், எவ்வளவு கிரியேட்டிவான ஆசிரியர்” போன்ற கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

CORONAVIRUS, CORONA, SCHOOLSTUDENT, TWITTER, AMERICA, MATHS, TEACHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்