'ஒரு இடி இடிச்சது போல சத்தம் கேட்டுச்சு'... 'தலை தெறிக்க ஓடிய மக்கள்'... 'அப்படியே உள்வாங்கிய பூமி'... பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வேளாண் விளை நிலம் ஒன்றில் பூமி உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டதையடுத்து மக்கள் பீதியடைந்தனர்.

மெக்சிகோ நாட்டில் பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியதில் பெரிய பள்ளம் தோன்றியது. ஆனால் இதில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் என்னவென்றால் இது ஒரு சாதாரண பள்ளம் அல்ல. இது சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்டதாக உருவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய அந்த பகுதி மக்கள், ''ஏதோ பூகம்பம் வெடிக்கப் போகிறது என நினைத்து நாங்கள் தலை தெறிக்க ஓடினோம். ஆனால் பள்ளம் விழுவதற்கு முன் பயங்கர சப்தத்துடன் இடி இடித்தது'' எனத் தெரிவித்தனர். ஒருவழியாகப் பயம் விலகிய மக்கள் பிறகு பள்ளத்தைக் கொஞ்சம் தயக்கத்துடனும் எச்சரிக்கையுடனும் சென்று பார்த்தனர்.

குறிப்பிட்ட இடத்துக்குக் கீழே பூமியில் பாறைகள் குறைவாக இருப்பதும், திடீரென  நீரோட்டம் ஏற்பட்டாலும் இப்படி பள்ளம் தோன்றும் என்று புவியியல் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்