மலை மாதிரி எழுந்த மணல்புயல்.. ரோட்ல சிக்கிய பயணிகள்.. உலக அளவில் திகைப்பை ஏற்படுத்திய வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கடந்த வாரம் கடுமையான மணற்புயல் ஏற்பட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது.
Also Read | 'என்னோட ஹீரோ".. ஆனந்த் மஹிந்திரா போட்ட வைரல் ட்வீட்.. யாருப்பா இவரு..?
சீனாவில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்பம் தாக்கி வருகிறது. இதனால் சீனாவில் பாலைவன பகுதிகள் மனிதர்கள் செல்ல முடியாத பிரதேசமாகி இருக்கின்றன. இந்நிலையில், வடக்கு சீனாவில் உள்ள கிங்காய் மாகாணத்தில் கடந்த வாரம் பலமான மணற்புயல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
மணல்புயல்
இந்த மணற்புயல் காரணமாக 200 மீட்டருக்கு தொலைவில் இருப்பவற்றை மக்கள் பார்க்க முடியாதபடி மணல் சூழ்ந்திருக்கிறது. சில இடங்களில் நிலைமை இன்னும் மோசமாகி சூரியனையே மறைத்துவிட்டதாக கூறுகிறார்கள் உள்ளூர் மக்கள். கிங்காய் மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் எதிரே மணல்புயல் உருவாவதை கண்டு திகைத்திருக்கின்றனர். இதனால் தங்களது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, புயல் கடக்கும் வரையில் காத்திருந்திருக்கின்றனர்.
மலை போல எழுந்த மணற்புயல் காதை பிளக்கும் சத்தத்துடன் வீசியிருக்கிறது. அச்சமூட்டும் வகையில் வீசிய மணல்புயலை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி இருக்கிறது. இந்த புயலினால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என சீன அரசு அறிவித்திருக்கிறது. இருப்பினும் மணல்புயல் ஏற்படும் வேளையில் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாக செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர் பாதுகாப்பு அதிகாரிகள்.
போக்குவரத்து
இந்த புயல் சுமார் நான்கு மணிநேரம் நீடித்திருக்கிறது. ஹைக்ஸி மங்கோலிய மற்றும் திபெத்திய தன்னாட்சி மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். புயலால் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்ததால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஜூன் நடுப்பகுதியில் இருந்து, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பெரும் பகுதிகள் அதிக வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றன. இதேபோல ஐரோப்பாவிலும் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துவருகிறது. ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் வெப்பம் காரணமாக காட்டுத் தீ பரவியுள்ளது. வரும் ஆண்டுகளில் வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்பட்டு அவை தீவிரமாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | காதலியை Impress பண்ண இளைஞர் செஞ்ச காரியம்.. அலேக்காக தூக்கிய போலீஸ்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஒரு தடயமும் இல்லையே.." திருடனை பிடிக்க வழி தேடிய போலீஸ்.. "கடைசியா கொசு கொடுத்த 'Clue'
- Heat பண்ணாலும் உருகாத ஐஸ்க்ரீம்.. குதூகலமான ஐஸ்க்ரீம் பிரியர்கள்.. "வெயில்'ல வெச்சு கூட இத குடிக்கலாம் போலயே.."
- மொத்தமா 3,800 டன் எடை கட்டிடம்.. "அப்படியே அலேக்கா தூக்கி மாத்தி வச்சுடலாமா??.." கோதாவில் இறங்கிய பொறியாளர்கள்.. சீனாவில் அதிசயம்
- "நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரகூடாது.." 10 வருஷமா துடைப்பம் வித்த காசு.. 100 வயசு'லயும் சபாஷ் போட வைத்த முதியவர்
- "எல்லாம் Waste-அ போச்சே.." Maths'ல பையன் வாங்கிய மார்க்.. தேம்பி தேம்பி அழுத தந்தை.. வைரல் வீடியோ பின்னால் உள்ள காரணம்
- திட்டமிட்டே சீன விமான விபத்து நடந்ததா? Black box-ஐ ஆய்வு செய்த அமெரிக்க நிபுணர்கள் சொன்ன பரபரப்பு தகவல்..!
- "இதை சாதாரண குகைன்னு தான் நெனச்சோம்".. ஆராய்ச்சியாளர்களை அதிரவைத்த பிரம்மாண்ட துளை.. இந்த காடு முழுசும் இப்படித்தானாம்..!
- ஒற்றை பெயரால் வந்த குழப்பம்.. 10 நிமிஷத்துல 2 லட்சம் கோடியை இழந்த பணக்காரர்... பாவம் மனுஷன்..!
- ‘மறுபடியும் முதல்ல இருந்தா..!’ சீன சுகாதார அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல் என்ன..?!
- “கட்டிப்பிடிக்க, முத்தம் கொடுக்க கூடாது”.. தம்பதிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த சீனா.. என்ன காரணம்..?