Emaar Tower Fire : துபாய் புர்ஜ் கலிஃபா அருகே உள்ள 35 மாடி கட்டிடத்தில் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிக உயரமான கட்டிடமாக உள்ள புர்ஜ் கலிஃபா அருகே அமைந்துள்ள கட்டிடத்திற்கு நேர்ந்த நிலை தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

உலகின் மிக உயர கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபா துபாயில் அமைந்துள்ளது. இங்கே உலகின் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் இந்த கட்டிடத்தில் வெளியிடப்பட்டு பெரிய அளவில் கவனம் பெறும். அது மட்டுமில்லாமல், அவ்வப்போது ஏதேனும் பண்டிகை சமயங்களில் இந்த புர்ஜ் கலிஃபா கட்டிடம் வண்ணமயமாக மின்னுவதையும் சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்திருப்போம்.

அப்படி ஒரு சூழலில், துபாயின் புர்ஜ் கலிஃபா அருகே அமைந்துள்ள 35 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த கட்டிடம் தீ பிடித்து எரிவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் உள்ள நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. இது தொடர்பாக அங்குள்ள ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி, யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் அனைவரும் விரைவில் வீடு திரும்புவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

துபாய் பகுதியில் பல வானுயர கட்டிடங்கள் உள்ள நிலையில், தற்போது அப்படி ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம், கடும் பதற்றத்தை அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்தும் உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாக வில்லை என தெரிகிறது.

 

DUBAI, BURJ KHALIFA, EMAAR TOWER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்