15 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம்!.. பூமிக்கு 'மிக அருகில்' வரும் செவ்வாய்!.. என்ன நடக்கப்போகிறது?.. வெளியான 'அதிர்ச்சி' தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளியில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய நிகழ்வு நாளை (புதன்கிழமை) வானில் நடைபெற உள்ளது. இதில் பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்க உள்ளது.
பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ தொலைவு ஆகும். இதில் நீள் வட்ட பாதை பயணத்தில் மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரு கிரகங்களுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. தொலைவாக இருக்கும்.
இந்த நீள்வட்ட பாதை தொலைவு காரணமாகவே பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365 நாட்களும், செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வர 687 நாட்களும் ஆகிறது.
இதனால், விரைவாக சூரியனை சுற்றி வரும் பூமி 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகத்தை அருகில் சந்திக்கிறது. இதில், அமீரக நேரப்படி நாளை (புதன்கிழமை) அதிகாலை சுமார் 3.20 மணிக்கு செவ்வாய் கிரகம் வானில் பிரகாசமாக தோன்றும். நாளை பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது.
அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்தே இந்த அரிய நிகழ்வு நடைபெறும். எந்த கிரகமும் சூரியனுக்கு நேர் எதிரில் வரும்போது பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைவது இயல்புதான். அந்த வகையில், நாம் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது செவ்வாய் கிரகம் இன்னும் பெரிதாகவும், பிரகாசமாகவும், அருகிலும் தெரியும்.
இந்த ஆண்டு, இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம். மிக பிரகாசமாக பார்க்க வேண்டுமானால் இம்மாத இறுதிவரை காணலாம். நாட்கள் கடந்து செல்ல செல்ல தொலைவும் அதிகரிப்பதால், பிரகாசமும், அளவும் பார்ப்பதற்கு குறையும்.
பொதுமக்கள் சூரிய மறைவுக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரம் பார்க்கலாம். பல வாரங்களுக்கு இதுபோல வானில் இந்த காட்சி தோன்றும்.
நள்ளிரவு நேரமாக இருந்தால் நமது தலைக்கு மேலே காணலாம். காலை நேரத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்க்கும்போது புள்ளியாக ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமாக தெரியும். அமீரகத்தில் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபடுவோர் மற்றும் வானியல் நிபுணர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- செவ்வாய் கிரகத்தில்... புதைந்து போன 3 ஏரிகள் கண்டுபிடிப்பு!.. ஆய்வில் வெளியான 'அதிர்ச்சி' தகவல்!.. அப்படினா அங்க உயிர்கள் வாழ்வு சாத்தியமா?
- ஹை ஃபை வாழ்க்கை... கடவுள் வழிபாடு!.. செவ்வாய் கிரகத்தில் 'ஏலியன்ஸ்' செய்த 'சம்பவங்கள்'!.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி!
- "இப்படி ஒரு காட்சியை..." "வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டீர்கள்..." 'கிரஹணத்தின்' திகைக்க வைக்கும் 'மற்றொரு காட்சி...!' 'வைரல் புகைப்படம்...'
- 'லாக்டவுனே எல்லாரையும் வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா!?'.. பூமிக்கு வந்த புதிய சிக்கல்!.. செயற்கைகோள்களுக்கு ஆபத்தா?.. வெளியான பரபரப்பு தகவல்!
- "புவி வெப்பம் அடைவதால் 2100ல் இந்த அபாயம் ஏற்படும்!" - ஜெர்மன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
- 'பூமியை' நோக்கி வரும் 'சிறு கோள்'... இந்த தேதியில் உலகம் 'அழிந்து' விடுமா?... 'இணையத்தில்' வைரலாக பரவும் 'தகவல்'...
- பூமியை நோக்கி வரும் 'எரிகல்'...! '4 கி.மீ.' அகலம்... மணிக்கு '31,320 கி.மீ.' வேகம்... 'ஏப்ரல் 29'ம் தேதி... 'ஆபத்து' இருக்குமா என்று 'நாசா' விளக்கம்...
- ‘உத்து பாத்தாதான் தெரியும்!’.. ‘சூரிய ஒளியில் புள்ளி போல் தெரியும் பூமி!’.. ‘30 வருஷத்துக்கு’ பின் நாசா ‘புதுப்பித்து’ வெளியிட்ட ‘வைரல்’ புகைப்படம்!
- முதலில் 'நிலவு'... அடுத்தது 'செவ்வாய்' ... விண்வெளி சுற்றுலாக்கு தயாராகும் இந்தியன்... நாசா அறிவிப்பு...!