'ஃபேஸ்புக்' குழுமத்திற்கு 'புதிய பெயரை' அறிவித்தார் மார்க் ஜுக்கர்பெர்க்...! - ஏன் 'இப்படி' ஒரு பெயர வச்சார்...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், தனது பெயரை மாற்றியுள்ளது. இதை, அதன் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். 

Advertising
>
Advertising

மெய்நிகர் ஆன்லைன் உலகமான 'மெட்டாவெர்ஸ்' நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாக பேசிய மார்க் ஜூக்கர்பெர்க்,  அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், தற்போது ஃபேஸ்புக், மெட்டா என்ற புதிய பெயரைப் பெற்றுள்ளது.

இது பற்றி, ஃபேஸ்புக் நிறுவனத்தின் கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் மார்க் ஜுக்கர்பெர்க் பேசியபோது, பெயர் மாற்றத்தை அறிவித்தார்.

ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றத்திற்கு காரணமான மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? என்பது தொடர்பாக தற்போது சமூக ஊடகங்களில் காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டுள்ளது.  மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் உலகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்றாலும், மக்களை மேலும் அதிகமாக ஆன்லைனில் இருக்க நேரத்தை செலவழிக்க வைக்கும் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

மெட்டாவர்ஸ் என்பது சமூக இணைப்பின் அடுத்த பரிணாம வளர்ச்சி ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள மக்கள்  அனைவருக்குமான கூட்டுத் திட்டமாகும். நிகழ் காலத்தில் சாத்தியமாக இருப்பதையும் தாண்டி, மேலும் மக்கள் இணக்கமாக ஒருவொருக்கொருவர் பழகவும், கற்றுக்கொள்ளவும், விளையாடவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்