'ஒரு வழியாக'.. 'உலகின் முதல் நபருக்கு.. செலுத்தப்பட்ட பைசர் கொரோனா தடுப்பு மருந்து!'.. வெளியான வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் 3-ஆம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில் பைசர் - பயோன்டெக் (Pfizer) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்துள்ளனர்.

95 சதவீதம் இந்த தடுப்பூசி பலனளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு  அவசரகால அனுமதி அளித்திருக்கிறது. இதனால் இங்கிலாந்தில் டிச 08 முதல் பரிசோதனைகள் தவிர்த்து,  மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசியும் போடப்பட தொடங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் நபராக 90 வயது மூதாட்டியான மார்க்ரெட் கீனென் (Margaret Keenan) என்பவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகாரப்பூர்வமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட உலகின் முதல் நபராகியுள்ளார் மார்க்ரெட் கீனென்.

மார்க்ரெட்டுக்கு இங்கிலாந்து நேரப்படி சரியாக காலை 6.31 மணிக்கு  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.  21 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட உள்ளது என்பதும், “தனது 91வது பிறந்தநாளை அடுத்த வாரம் கொண்டாட உள்ள தமக்கு, இது சிறந்ததொரு பிறந்தநாள் பரிசாக அமையும்” என கீனென் இதுபற்றி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்