இந்த 'உலகத்த' விட்டு போய் '70 வருஷம்' ஆச்சு...! 'ஆனா இன்னைக்கும் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாத்திட்டு இருக்காங்க...' - வியக்க வைக்கும் உண்மை...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவரின் உடம்பில் உள்ள செல்கள் இன்றளவும் மருத்துவ கண்டிபிடிப்புகளுக்கு பயன்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த ஹென்ரீட்டா லாக்ஸ். என்ற பெண்மணி கடந்த 1951ம் ஆண்டு அக்டோபர் மாதம், செர்விக்கல் கேன்சரால் இறந்தார். 21 வயதில் இறந்த ஹென்ரீட்டா லாக்சின் உடல் 70 ஆண்டுகள் ஆனாலும், இவருடைய உடலில் உள்ள செல்கள் இன்று வரை பல்வேறு மருத்துவ கண்டிபிடிப்புகளுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது

இவரும் செல்களை கொண்டே இதுவரை உயிர்கொல்லி நோய்களான  போலியோ தடுப்பூசி, HPV தடுப்பூசி, ஜெனெடிக் மேப்பிங் தொடங்கி கோவிட் தடுப்பூசி வரை கண்டறிய காரணமாக இருக்கிறது. ஹென்ரீட்டா லாக்ஸ் அவர்களின் செல்களுக்கு மருத்துவ உலகம்  HeLa செல்கள் என்று பெயரிட்டுள்ளனர். HeLa என்பது இவருடைய பெயரின் ஆங்கில முதலெழுத்துகளைக் குறிக்கின்றன (Henrietta Lacks).

1951-ஆம் ஆண்டு செர்விக்கல் கேன்சர் காரணமாக ஹென்ரீட்டா லாக்ஸ், பால்டிமோரில் உள்ள ஜான் ஜாப்கின்ஸ் என்ற மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவமனையோ ஹென்ரீட்டா அவர்களின் அனுமதியின்றி, இவரின் திசுக்களை மருத்துவமனை பயன்படுத்தத் தொடங்கியது. அதோடு ஹென்ரீட்டா அவர்களின் மனித செல்கள் எண்ணிக்கையின்றி வளரும் தன்மைக் கொண்டதாக மாறியது.

தற்போது ஹென்ரீட்டாவின் 70 வது ஆண்டு நினைவு நாளையொட்டி, உலக சுகாதார மையம், இவரின் மருத்துவ பங்களிப்பை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், ஹென்ரீட்டாவின் அனுமதி வாங்காமலேயே செல்களை எடுத்து ஆய்வு செய்ய உட்பட்டது தவறான செயல் என்பதையும் 'வரலாற்றுப் பிழை' என்பதையும் பதிவு செய்தது.

மேலும், ஹென்ரீட்டாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'Henrietta Lacks Legacy' என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகம் என்னதான் பல காரணங்களை சொன்னாலும் ஆப்பிரிக்க வம்சாவளி கறுப்பின பெண்ணின் செல்களை முறையான அனுமதியின்றி பயன்படுத்தி வந்தது குற்றம் என பலர் கூறி வருகின்றனர். அவர் கறுப்பினப் பெண்ணாக இருப்பதால் அவரின் உடல் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்