‘புதரை அகற்றும் போது கெடைச்ச புதையல்!’.. ‘மனக் கோட்டை எல்லாம் கட்டிய நபர்’.. கடைசியில் யூடர்ன் போட்ட ‘அதிர்ஷ்டம்!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனியில் கல்லறை ஒன்றை சுத்தம் செய்தபோது தங்க நாணயமும் பணமும் ஒருவருக்கு கிடைத்தது. ஆனால் தமக்கு புதையல் கிடைத்திருப்பதாக எண்ணிய அவருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கதையாக பெரும் திருப்பம் நடந்துள்ளது.

ஜெர்மனியின் என்கிற Dinklage நகரில் வேர் மற்றும் புதர்களை அகற்றும் பணியை ஒருவர் செய்துகொண்டிருந்தார். அப்போது பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் தங்க நாணயங்கள் மற்றும் பணம் இருப்பதை அவர் கண்டுள்ளார். இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அடுத்தநாளே மேலும் சில பணியாளர்களுக்கு தங்க நாணயங்கள் அடங்கிய கண்டெய்னர்கள் கிடைத்தன. பொதுவாகவே ஜெர்மனியில் இப்படி கிடைக்கும் புதையலின் உண்மையான உரிமையாளர் இந்த புதையலுக்கு உரிமை கோராவிட்டால் முதலில் கண்டெடுத்தவருக்கு புதையலில் பாதி கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதையலின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டது. அதேசமயம் புதையலை கண்டெடுத்தவருக்கு அதில் ஒரு பாதி வழங்கப்படவில்லை என்பதால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போதுதான், “தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த நாணயங்களில் சில 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது; யாரோ ஒருவர்தான் சமீபத்தில் இவற்றை இங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள்; எனவே இது புதையல் அல்ல” என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

ALSO READ: 'என்ன சத்தம் இது?'.. ZOOM மீட்டிங்கில் வழக்கு விசாரணை!... ‘வக்கீல் ஈடுபட்ட ஆபாச காரியத்தால்’ ஸ்தம்பித்து போன கோர்ட்! பெண் அதிகாரிகளை உறையவைத்த ‘மோசமான’ சம்பவம்!

அதாவது அவருக்கு பங்கு தரமுடியாது என்று நீதிமன்றம் நேரடியாகவே கூறிவிட்டது. இதனை அடுத்து அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்