"இது தான் முதல் தடவ.." பாகிஸ்தானில் வரலாறு படைத்த இந்து பெண்.. குவியும் பாராட்டு..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், அதிகமாக முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "அந்த 7 மணி நேரத்த வாழ்க்கை'ல மறக்க மாட்டேன்.. " பயங்கரமான இரவு.. பீதியில் உறைந்த இளைஞர்!!..

அதே போல, பாகிஸ்தானில் பெரும்பாலும் உயர் முக்கிய பொறுப்பில் ஆண்கள் தான் நிறைய இருப்பார்கள். இதனால், அங்குள்ள பெண்கள் உயர் அதிகாரிகளாகவோ அல்லது முக்கிய பொறுப்பில் இருப்பதோ மிக மிக அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கும் நிலையில், குறிப்பாக பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களில், பெண்கள் உயர் பதவியில் இருப்பது என்பது மிக மிக கடினமான ஒன்று. ஆனால், அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய அரிய விஷயத்தை பாகிஸ்தான் காவல் துறையில் செய்து காட்டி அசத்தியுள்ளார் 26 வயதாகும் இந்து பெண் மனிஷா ரோபேட்டா.

பாகிஸ்தான் காவல்துறையில் டிஎஸ்பி ஆகிய முதல் இந்து பெண் என்ற வரலாறையும் படைத்துள்ளார் மனிஷா ரோபேட்டா. சிந்து மாகாணத்தைச் சேர்ந்த 26 வயதாகும் மனிஷா, சிந்த் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் தேர்ச்சி பெற்று, 16-வது இடத்தையும் அவர் பெற்றுள்ளார். தற்போது பயிற்சி பெற்று வரும் மனிஷா, விரைவில் டிஎஸ்பியாகவும் பதவி ஏற்க உள்ளார்.

தான் வெற்றி பெற்றது தொடர்பாக பேசும் மனிஷா, பெண் முன்னேறும் வழிகளை முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன் என்றும், காவல்துறையில் பாலின சமத்துவத்தையும் ஊக்குவிக்க முயல்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மனிஷா ஆரம்பத்தில் மருத்துவராக வேண்டும் என விரும்பியுள்ளார். அவரது உடன் பிறந்த சகோதரிகள் மூன்று பேரும் தற்போது மருத்துவராக உள்ள நிலையில், ஒரே ஒரு மார்க்கில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் மனிஷா தோல்வி அடைந்துள்ளார். இதன் பின்னர் சிந்த் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்காக தயாராகி வந்த மனிஷா, அதில் தேர்ச்சி பெற்று 16 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதிகம் துன்புறுத்தலுக்கு ஆளாகப்படும் பெண்களுக்கு ஒரு பெண் பாதுகாப்பாளர் தான் தேவை என்பதை உணர்ந்து தான் போலீசில் சேர வேண்டும் என்றும் பின்னர் மனிஷா விரும்பி உள்ளார். அதே போல பாகிஸ்தான் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றத்தை தட்டிக் கேட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த வழியை தான் உருவாக்க விரும்வுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து இந்து பெண் ஒருவர், போலீஸ் உயர் பதவியில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ளது, மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Also Read | பையன் இல்லாம தனியா கல்யாணம் பண்ணி வைரலான பெண்.. "அடுத்த கட்ட பிளானுக்கும் இப்போ அவங்க ரெடி.."

PAKISTAN, MANISHA ROPETA, MANISHA ROPETA FIRST HINDU WOMAN, PAKISTAN, DSP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்