"லாட்டரில பணம் ஜெய்ச்சும் இப்டி ஒரு ட்விஸ்ட்டா?".. மனைவி அக்கவுண்ட்டில் பணம் மாற்றியதும் நடந்த பரபரப்பு!!
முகப்பு > செய்திகள் > உலகம்துபாய், கேரளா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் லாட்டரி வாங்கும் பழக்கம் என்பது பெரும்பாலான மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வரும் விஷயமாகும்.
அப்படி லாட்டரி டிக்கெட்டை வாங்கி, அதிர்ஷ்டம் உள்ளிட்ட விஷயங்களும் கைகூடி வரும் சமயத்தில், அதிக பணம் கிடைத்து ஒரு நபரின் வாழ்க்கை மாறுவது குறித்து கூட ஏராளமான செய்திகளை கடந்து வந்திருப்போம்.
அப்படி தான் தாய்லாந்தின் இசான் மாகாணத்தை சேர்ந்த மணித் (வயது 49) என்ற நபருக்கும் லாட்டரி மூலம் பரிசு விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர் எடுத்த டிக்கெட் மூலம், கடந்த சில தினங்களுக்கு முன்பாக 6 மில்லியன் Baht பரிசாக கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 1.3 கோடி ரூபாய் ஆகும். வரி விலக்கு போக, மீதி பணமும் மணித் வங்கிக் கணக்கில் செலுத்தபட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கடுத்து, வெற்றி பெற்ற பணத்தினை தனது மனைவியின் வங்கி கணக்கிற்கும் மணித் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மனைவியான அங்கனரத், கணவன் மணித் லாட்டரியில் வென்ற பணத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டதாகவும் மணித் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, அவரது காதலனுடன் அங்கனரத் சென்றிருக்கலாம் என்றும் உறவினர்கள் கருதி உள்ளனர். மனைவியின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத மணித், முற்றிலுமாக அதிர்ந்து போயுள்ளார்.
மணித் மற்றும் அங்கனரத் ஆகியோருக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், மனைவி இப்படி ஒரு செயல் செய்தது கடுமையாக மன உளைச்சலுக்கும் மணித்தை ஆளாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு சூழலில், 3 தினங்கள் கழித்து மணித்தின் மனைவி மீண்டும் திரும்பி வந்துள்ளார். ஆனால் பரிசு கிடைத்த பணத்தினை குழந்தைகளுக்கு மட்டும் ஒரு பகுதியை கொடுத்துள்ள அங்கனரத், கணவருடன் இனி சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே போல, அனைவரும் குறிப்பிடுவது போல காதலனுடன் ஓட்டம் பிடிக்கவில்லை என்றும் அங்கனரத் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | "என் பைக் தொலைஞ்சு போச்சு, Pray பண்ணுங்க".. லடாக் போன TTF வாசன் பகிர்ந்த வீடியோ!!.. பரபரப்பு பின்னணி!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும்".. மர்ம ஆசாமியின் பலே உருட்டு.. இரக்கப்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- "என் மனைவிய கொலை பண்ணிட்டேன்".. போலீசாருக்கு வந்த அழைப்பு.. "வீட்டுல போய் பாத்ததும் தரைல".. திடுக்கிடும் பின்னணி!!
- "புருஷன காணோம்ங்க ஐயா".. விசாரணையில் இறங்கிய போலீஸ்.. கடைசில சிக்கிய அம்மாவும், மகனும்".. நடுங்க வைத்த பயங்கரம்!!
- "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. பேங்க்-அ கொள்ளை அடிச்சிட்டு வந்துடறேன்".. டாக்சி ட்ரைவரை அலறவிட்ட திருடன்..!
- "மாரடைப்பால் இறந்த அப்பா?".. 3 மாசம் கழிச்சு தாய் போனில் எதேச்சையாக மகள் கேட்ட ஆடியோ!!.. திடுக்கிடும் சம்பவம்.
- இந்த Resume எப்படி செலக்ட் ஆகாம போகும்னு பாக்குறேன்.. கூகுளில் வேலைக்காக இளைஞர் உருவாக்கிய அடடே Resume.. வைரலாகும் Pic..!
- காது கேக்காம போச்சுன்னு 5 வருஷமா கவலையில் இருந்த நபர்.. செக் பண்ணப்போ ஒருநிமிஷம் மனுஷன் அதிர்ந்து போய்ட்டாரு..!
- "வா டான்ஸ் ஆடலாம்".. ஓடும் ரயில்ல Thug Life சம்பவம் செஞ்ச தாத்தா.. பாட்டி எடுத்த ஸ்வீட் ரிவெஞ்ச்.. வைரலாகும் Cute வீடியோ..!
- காட்டில் காணாம போன 'நபர்'.. "எங்க தேடியும் கெடக்கலையாம்".. கடைசியில் செல்ல நாய் செய்த நெகிழ்ச்சி காரியம்!!
- இணையத்தில் வைரலாகும் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர்.. யாரு சாமி இவரு?.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!