இணையத்தில் வைரலாகும் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர்.. யாரு சாமி இவரு?.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இணையத்தில் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர் எனும் தலைப்பில் ஒருவருடைய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
Also Read | ரங்கன் வாத்தியார் - கபிலனாக மாறிய தோனி, ஜடேஜா.. CSK அணி பகிர்ந்த மாஸான வீடியோ.. ஜடேஜா போட்ட தெறி கமெண்ட்..!
இணையத்தின் வளர்ச்சியினால் சமூக வலை தளங்கள் தற்போது கோலோச்சி வருகின்றன. சமூக வலை தளங்களை பொறுத்தவரையில் விநோதமான செய்திகளுக்கும் வீடியோக்களுக்கும் எப்போதுமே பஞ்சம் இருப்பதில்லை. இதுபோன்ற விஷயங்கள் உடனடியாக சோசியல் மீடியாவில் வைரலாகி விடுவதும் உண்டு. அந்தவகையில் தற்போது உலகின் மிக நீளமான மூக்குடைய நபர் என அழைக்கப்படும் ஒருவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் Historic Vids எனும் பக்கத்தில் தான் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருக்கிறது. தாமஸ் வெடர்ஸ் என்பவரின் மெழுகுச்சிலை Ripley's Believe It Or Not அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையின் புகைப்படம் தான் Historic Vids எனும் பக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி பகிரப்பட்டிருக்கிறது. அப்பதிவில்,"தாமஸ் வாட்ஹவுஸ் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஆங்கில சர்க்கஸ் கலைஞர் ஆவார். 7.5 இன்ச் (19 செமீ) நீளம் கொண்ட உலகின் மிக நீளமான மூக்கைக் கொண்டவர்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதனை கின்னஸ் நிர்வாக அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. தாமஸ் பற்றி கின்னஸ் இணையதளத்திலும் குறிப்பு இருக்கிறது. அதில்,"1770 களில் இங்கிலாந்தில் வாழ்ந்த பயண ஃப்ரிக் சர்க்கஸ் (travelling freak circus) உறுப்பினரான தாமஸ் வெடர்ஸ், 19 செமீ (7.5 அங்குலம்) நீளமுள்ள மூக்கைக் கொண்டிருந்தார் என்று வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாமஸ் குறித்த Historic Vids-ன் இந்த பதிவு தற்போது படுவைரலாக பரவி வருகிறது. இதை 1.2 லட்சம் பேர் லைக் செய்திருக்கின்றனர். இருப்பினும் சமகாலத்தில் உலகின் மிக நீளமான மூக்கை கொண்டவர் (ஆன்) துருக்கி நாட்டை சேர்ந்த மெஹ்மெட் ஓசியூரெக் என்பவர் தான். இதனை கின்னஸ் நிர்வாகம் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தியிருந்தது. இவருடைய மூக்கின் நீளம் 3.46 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 250 பெண்களை வரன் பார்க்க குவிந்த 11 ஆயிரம் பேர்.. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆன சம்பவம்!!
- ராத்திரி நேரத்துல பிளாஸ்டிக் பையோட சுற்றிய வாலிபர்.. லிவிங் டுகெதரில் இருந்த மகளை தேடிப்போன அப்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இந்தியாவையே திகைக்க வச்ச சம்பவம்..!
- வேலை தேட போறேன்னு மனைவியை கொண்டு போய்.. பணத்துக்கு விற்பனை செய்த கொடூர கணவன்.. இளம்பெண்ணின் போன் காலால் நடுங்கிய குடும்பம்!!
- 2 பெண்கள், 8 குழந்தைகளுடன்.. ஒரே வீட்டில் வாழும் நபர்.. அடுத்ததா போட்டுள்ள பிளான்.. வைரல் பின்னணி!!
- கல்யாணத்துக்கு மறுத்த காதலி.. வீட்டுக்கே போய் இளைஞர் செஞ்ச காரியம்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த அடுத்த அதிர்ச்சி..!
- காட்டுக்குள் கிடந்த இளம்பெண் சடலம்.. CCTV கேமராவில் சிக்கிய முன்னாள் காதலன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!
- "கார்டு மேலே இருக்க நெம்பர் சொல்லுங்கோ சார்".. ஆபீஸர்னு நெனச்சு OTP சொன்ன நபர்.. அடுத்த செகண்ட் வந்த அதிர்ச்சி மெசேஜ்.!
- தனியாக இருந்த கணவன், மனைவி.. பட்டப்பகலில் கேட்ட அலறல் சத்தம்.. குலை நடுங்க வைக்கும் கொடூரம்!!
- லாட்டரில கெடச்ச ₹ 81 கோடி.. "ஆனாலும் இந்த ஒரு விஷயத்துக்காக தான் மனுஷன் வெயிட்டிங்ல இருக்காராம்"...
- மனைவி கொடுத்த ஹார்லிக்ஸ்.. கொரியரில் வந்த விஷம்.. கேரளாவில் அடுத்த அதிர்ச்சி!!