கனவில் வந்த நம்பர்கள்.. "கொஞ்ச நாள்ல வாழ்க்கையே மாறிடுச்சு.." கோடி கோடியா அள்ளிக் கொடுத்த அதிர்ஷ்டம்
முகப்பு > செய்திகள் > உலகம்தூங்கிக் கொண்டிருந்த போது, கனவில் வந்த எண்களைக் கொண்டு ஒருவரின் வாழ்வே திரும்பியது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
அமெரிக்காவில், அரசு அனுமதியுடன் லாட்டரி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், தங்களின் வாழ்வில் ஏதாவது திருப்புமுனை நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், லாட்டரிகளை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகம்.
அடிக்கடி, இது போன்ற லாட்டரி டிக்கெட் வாங்கும் நபர்கள் பலருக்கு எதிர்பாராத நேரத்தில் கூரையை பிய்த்துக் கொண்டு, அதிர்ஷ்டம் நடைபெறும் செய்திகளை நாம் நிறைய பார்த்திருப்போம்.
கனவில் வந்த எண்கள்
அந்த வகையில், வர்ஜீனியாவைச் சேர்ந்த அலோன்சோ கோல்மேன் (Alonzo Coleman) என்பவர், கார்னர் மார்ட்டில் இருந்து லாட்டரி டிக்கெட்டை வாங்கி உள்ளார். அதுவும், வெறும் இரண்டு அமெரிக்க டாலர்களில் தான், இந்த லாட்டரி டிக்கெட்டையும் அலோன்சோ வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் சமயத்தில், தனக்கு அடித்த ஜாக்பாட் மூலம் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளார் அலோன்சோ கோல்மேன்.
கடந்த சில தினங்களுக்கு முன், தொலைக்காட்சியில் லாட்டரி டிராவை அலோன்சோ பார்த்துக் கொண்டிருந்த போது, தன்னிடம் இருந்த சீட்டில் உள்ள எண்ணின் வரிசை பொருத்தமாக இருப்பதைக் கண்டுள்ளார். இதன் காரணமாக, அவர் சுமார் 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி) வென்றுள்ளார்.
இப்டி ஒரு அதிர்ஷ்டமா?
லாட்டரியின் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நபரான கோல்மேன், தான் வெற்றி பெற்ற வரிசை எண்களை லாட்டரி வாங்குவதற்கு முன்பே, தனது கனவில் கண்டதாக லாட்டரி அதிகாரிகளிடம் கூறி உள்ளார். மேலும், தனது வெற்றி பரிசுக்கான காசோலையுடன் அலோன்சோ கோல்மேன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வர்ஜீனியா லாட்டரி வெளியிட்டுள்ளது.
கனவில் கண்ட எண்களை வைத்து, லாட்டரி வாங்கிய நபருக்கு அதிர்ஷ்டம் அள்ளிக் கொடுத்தது பற்றி, பலரும் வியப்புடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அலோன்சோவை போல, அமெரிக்காவின் மிச்சிகனில் ட்ரக் டிரைவராக பணிபுரிந்து வரும் இல்லினாய்ஸ் என்பவர், தனக்கு லாட்டரி குலுக்கலில் 2000 டாலர்கள் வரை பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 1 மில்லியன் டாலர்கள் பரிசாக வந்து சேர்ந்த விஷயம், அவரை திக்கு முக்காட செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தூக்கத்தில் பாதியில் எழும்பி கதறி கதறி அழுகை'... 'ஐயோ, கனவில் நடந்த சம்பவம்'... 'உடனே ஹாஸ்பிடல் ஓடிய பெண்'... எப்படிங்க உங்களுக்கு தெரியும், நெஞ்சை பிடித்து கொண்டு உட்கார்ந்த டாக்டர்!
- '12 வயசுல ஆசைப்பட்டேன்...' ஆனா 67 வயசுல தான் 'என் லட்சியம்' நிறைவேறியிருக்கு...! - 50 வருசமா உள்ளுக்குள்ள எரிந்துக்கொண்டிருந்த கனவு...!
- தூக்கத்தில் உருவாகும் 'மர்ம' நோய்...! 'நூறு வருஷத்துக்கு ஒரு தடவ தான் இந்த மாதிரி நோய் உருவாகும்...' - கலக்கத்தில் மருத்துவர்கள்...!
- இப்டியொரு சம்பவத்தை யாரும் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.. கணவர் ‘கனவால்’ மனைவிக்கு அடிச்ச ‘ஜாக்பாட்’..!
- 'என் மனைவியோட கனவுல வர விலங்குகள...' 'வாங்கி கொடுக்றது தான் என் மொத வேலை...' 'இப்போ யானை...' - மனைவியின் கனவுகளுக்காகவே வாழும் அதிசய கணவன்...
- ‘எதிர்காலம் பத்தி நிறைய எதிர்பார்ப்பு இருக்கு ஆனா’.. ‘டைரி எழுதி வைத்துவிட்டு’.. ‘சென்னை இளைஞர் எடுத்த விபரீத முடிவு’..
- ‘யோ-யோவில் தேர்வாகியும் எனக்கு நடந்தது அநியாயம்’.. ‘உலகக்கோப்பை கனவு குறித்து யுவராஜ் சிங் வேதனை’..