லவ் ப்ரொபோஸ்-க்கு வேற இடமே கிடைக்கலையா..?.. உலகின் ரொம்ப டேஞ்சரான இடத்தில் காதலை சொன்ன நபர்.. டக்குன்னு ஓகே சொன்ன காதலி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படும் உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் அணு உலையில் வைத்து தனது காதலியிடம் ப்ரொபோஸ் வைத்திருக்கிறார் ஒருவர். இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 90s கிட்ஸ்-னா சும்மாவா..?..கல்யாணத்துக்கு புல்டோஸரில் வந்த எஞ்சினியர் மாப்பிள்ளை.. வியந்துபோன மணப்பெண்..!

செர்னோபில்

வடக்கு உக்ரைனில் அமைந்துள்ளது செர்னோபில் அணு உலை. சோவியத் யூனியனில் உக்ரைன் இருந்த போது இந்த பகுதியில் அணு உலை கட்டப்பட்டது. இதனை அடுத்து, 1986 ஏப்ரல் 26-ம் தேதி நிகழ்ந்த விபத்தால் இரண்டு முறை அணு உலைகள் வெடித்தன. மனித குலம் சந்தித்த மிகப்பெரிய அணு விபத்து இதுதான். தற்போது இந்த உலை செயல்படவில்லை என்றாலும் இதனுள் அணு எரிபொருட்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த 29 வயதான ஜேம்ஸ் கால்பிரைத் என்பவர் சுற்றுலா நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர், சமீபத்தில் உக்ரைனுக்கு பணிநிமித்தமாக சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு உதவியாளராக 26 வயதான ஒயிலா என்னும் உக்ரேனிய பெண் பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனிடையே உக்ரைன் மொழிபெயர்ப்பாளராக பணிபுரியும் ஒயிலா மீது காதல் கொண்டிருக்கிறார் ஜேம்ஸ்.

அணு அணுவாய் காதல்

இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்காக ஒருநாள் செர்னோபில் அணுஉலைக்கு வெளியே ஒயிலா காத்துக்கொண்டிருக்கும் போது, அங்குவந்த ஜேம்ஸ் தனது காதலை சொன்னதுடன் மோதிரத்தையும் நீட்டியிருக்கிறார். இதனால் திகைத்துப்போன ஒயிலா உடனேயே ஜேம்ஸின் காதலை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து இருவரும் காதலித்துவந்த நிலையில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி, இருவரும் உக்ரைனின் கீவ் நகரத்தில் திருமணம் செய்துகொண்டனர். அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு இரண்டு நாட்கள் முன்னர் இருவரின் திருமணமும் நடைபெற்றிருக்கிறது.

இதுகுறித்து பேசிய ஜேம்ஸ்," அவருக்கு என்மீது காதல் இருந்ததை நான் அறிந்திருந்தேன். அதனாலேயே துணிந்து எனது காதலை வெளிப்படுத்தினேன். அவர் என் காதலை ஏற்றுக்கொண்ட பிறகு இருவரும் திருமணம் குறித்து பேசினோம். இறுதியாக சில நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக எங்களது திருமணம் நடைபெற்றது" என்றார்.

தற்போது, ஜேம்ஸ் மற்றும் ஒயிலா ஆகிய இருவரும் இணைந்து சுற்றுலா நிறுவனத்தை கவனித்துக்கொள்கின்றனர். கொரோனா, ரஷ்யா தொடுத்துள்ள போர் ஆகியவை காரணமாக பல நஷ்டங்களை சந்தித்தாலும் நம்பிக்கையுடன் தங்களது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல இருப்பதாக கூறுகின்றனர் இந்த தம்பதியர்.

Also Read | வீட்டை தோண்டும்போது கேட்ட வினோத சத்தம்.. "இதுக்கு மேலயா வீட்டை கட்டி வச்சிருந்தீங்க".. திகைச்சுப்போன மக்கள்..!

MAN, PROPOSES LOVE, CHERNOBYL NUCLEAR POWER PLANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்