தன் கையால் செய்த பரிசுப் பொருளை... ஆசையாக காதலிக்கு கொடுக்க நினைத்து... இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... மருத்துவர்களால் நடந்த அதிசயம்!
முகப்பு > செய்திகள் > உலகம்காதலிக்கு பரிசு கொடுக்க ஆசை ஆசையாக மரத்திலான பொம்மை செய்தபோது, இளைஞர் ஒருவர் கட்டை விரலை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் மிச்சிகன் மாகாணத்தில், கார்சன் நகரத்தில் வசித்து வருபவர் இளைஞரான ஐடன் அட்கின்ஸ். இவர், கடந்த ஏப்ரல் மாதம் தனது காதலிக்கு, தனது கையிலேயே உருவாக்கப்பட்ட பொருள் ஒன்றை பரிசளிக்க விரும்பினார். இதனால், மரத்திலான பொம்மையை, அதானே உருவாக்கிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, பொம்மையை அவர் செதுக்கி கொண்டிருந்த போது நாலாபுறமும் மரத்துண்டுகள் பறந்து சென்றன.
அதனுடன் சேர்ந்து அவரது கையின் கட்டை விரலும் துண்டாகி பறந்தது. கட்டை விரல் துண்டானதால் அதிர்ச்சியடைந்த ஐடன் குடும்பத்தினர், விரைந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் துண்டான அவரது கட்டை விரலை கொண்டு வந்தால், மீண்டும் அவ்விரலை பொருத்திவிடலாம். இல்லையெனில் விபரீதமாகிவிடும் என எச்சரித்தனர். ஆனால் எவ்வளவு தேடியும் அவரது கட்டை விரலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, உடனடியாக கட்டை விரல் இல்லாமலே, அவரது கைக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக கட்டை விரல் இன்றி இயல்பாக வாழ முடியாமல் தவித்து வந்த ஐடனுக்கு, நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை ஒன்று கூறினர். அதாவது, அவரது கால் விரல் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து, கையில் கட்டை விரலுக்கு மாற்றாக வைக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த யோசனைக்கு ஐடன் மற்றும் அவரது குடும்பம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது இடது காலில் கட்டை விரலுக்கு அடுத்து இருந்த ஆள்காட்டி விரலை அகற்றி, ஐடனின் இடது கை கட்டை விரல் இருந்த இடத்தில் மருத்துவர்கள் பொருத்தினர். இந்த விரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால், ஐடன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். முன்பிருந்ததை போல, தற்போது கட்டை விரலை தம்மால் நன்றாக வளைக்கவும், நிமிர்க்கவும் முடிவதாக கூறியுள்ளார். காதலிக்கு மரப் பொம்மை பரிசு செய்ய போய் கை கட்டை விரலை இழந்த இளைஞர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஓடும் பேருந்தில்’ இளம்பெண்ணுக்கு.. திடீரென ‘தாலி கட்டிய’ இளைஞர்.. ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்..
- டிசம்பருக்கு பின் ‘செல்லாது’.. ‘கொலையில்’ முடிந்த ‘வதந்தி’.. ‘கோவையில்’ நடந்த அதிரவைக்கும் சம்பவம்..
- ‘தனியாக விட மனமில்லை’... ‘பைரவியை வைத்துக் கொண்டு’... ‘உணவு டெலிவரி செய்யும்’... 'வித்தியாசமான மனிதர்'!
- 'டியூசன் முடிந்து'... 'தங்கையுடன் வந்த 10 வயது சிறுமிக்கு'... '73 வயது முதியவரால் நேர்ந்த பரிதாபம்'!
- ‘பிராங்க் ஷோ என நம்ப மறுத்த இளம்பெண்’... 'இன்ப அதிர்ச்சி கொடுத்த தம்பதி'... 'கலங்க வைத்த சம்பவம்'!
- 2 மாதங்களாக ‘தொடர் இருமலால்’ அவதிப்பட்டவருக்கு.. பரிசோதனையில் ‘காத்திருந்த அதிர்ச்சி’..
- 'ஹலோ.. நூறா?'.. 'இங்க கொஞ்சம் வந்து, இந்த ஐட்டத்தை வாங்கித் தர்றீங்களா?'.. இளைஞர் கேட்ட 'வேறலெவல்' உதவி!
- 'தூங்கிட்டு இருந்தேன்.. மேல ஏதோ ஊத்தினா'.. 'கண் முழிச்சு பாத்தா'.. சந்தேகக் காதலி.. நெஞ்சை உலுக்கும் மரண வாக்குமூலம்!
- ‘மோடி கொடுத்த பணம்னு நினைச்சேன்’... ‘இளைஞரின் அதிரவைத்த வார்த்தை’... 'கலங்கி நிற்கும்’... ‘மற்றொரு வாடிக்கையாளர்'!
- '6 மாத கர்ப்பிணியான காதலி'... ‘மனம் மாறிய இளைஞர்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'!