ஏகிற வைத்த இணைய பில்?.. வாலிபர் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு போய் அரசு கொடுத்த 20 கோடி ரூபாய் நிதி உதவி!! பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > உலகம்இன்று பல இடங்களிலும் இணையத்தின் சேவை என்பது அதிமாகி கொண்டு தான் இருக்கிறது. இதன் காரணமாக, பல வீடுகளிலும் சிறந்த நெட்வொர்க் சேவையின் மூலம், இணையத்தை பயன்படுத்தியும் வருகின்றனர்.
இதில் சில இடங்களை பொறுத்து, இணைய சேவை என்பது சற்று ஸ்லோவாக கூட இருக்க வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் நிலையில், பணிகளில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு இணையதளத்தை பயன்படுத்தும் போது நிறைய சிரமம் கூட ஏற்படலாம்.
அந்த வகையில், US பகுதியை அடுத்த மிச்சிகன் என்னும் இடத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, மோசமான இணைய சேவை இருந்து வந்ததால், அவர் செய்த காரியம் ஒன்று, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Jared Mauch என்ற நபர், Michigan பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு, இந்த பகுதியில் குடிபெயர்ந்த நிலையில், சீனியர் நெட்வொர்க் ஆர்கிடெக்ட் ஆகவும் பணிபுரிந்து வந்துள்ளார். ஆரம்பத்தில், 1.5 Mbps வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்தி வந்த Jared, அதன் பின்னர் வயர்லெஸ் இணைய சேவைக்கும் மாறி உள்ளதாக கூறப்படுகிறது. Jared வசிக்கும் பகுதி கிராமப்புறம் என்பதால், அவரது பகுதியில் இணையத்தின் வேகம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக, சம்மந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு அதன் வேகத்தை அதிகரிக்க Jared Mauch முயற்சி மேற்கொண்ட நிலையில், அவரது பகுதிக்கு வேகமான இணைய சேவையை கொடுக்க முடியாது என்றும், இதற்காக இணைப்பை நீட்டிக்க வேண்டுமானால், 50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் ரூபாய்) வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த Jared, அதிரடி முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார்.
மற்றவர்கள் இணையத்தை தான் ஏன் பயன்படுத்த வேண்டும் என சொந்தமாக ISP (Internet Service Provider) ஒன்றையும் Jared உருவாக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் இதனை தனக்காக மட்டுமே Jared தொடங்கிய நிலையில், பின்னர் இந்த இணையதள சேவையை தற்போது, அவரது பகுதியில் உள்ள சுமார் 70 குடும்பங்கள் வரை பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்காக ஏராளமான பணமும் அவர் செலவு செய்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், சுமார் இரண்டரை மில்லியன்களுக்கு மேல், அரசும் நிதி உதவி செய்து, இன்னும் 1000 வீடுகளுக்கு Jared உருவாக்கிய இணைய சேவையை கொடுக்கவும் முன் வந்துள்ளது. தனது இணைய சேவையை பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி வருகிறார் Jared Mauch.
இணைய சேவை குறைவாக இருந்ததால், சொந்தமாக நிறுவனம் ஒன்றை வாலிபர் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு அரசும் உதவியுள்ள சம்பவம், வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கர்ப்பிணி பெண் இணையத்தில் தேடிய தகவல்.. "அடுத்த கொஞ்ச நாளுலயே காணாம போய்ட்டாங்களா??.." திடுக்கிட வைக்கும் பின்னணி
- சேட்டிலைட் மூலம் இணைய சேவை.. இந்தியாவையே மிரள வைக்கும் பக்கா பிளான்.. ஜியோவுடன் இணையும் புதிய நிறுவனம்!
- வெடித்த எரிமலை.. வெளியுலக தொடர்பில்லாமல் தவிக்கும் டோங்கோ தீவு.. உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்
- பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் உச்சக்கட்ட மோதல்.. ‘இவங்கள முடக்கணும்னா இதுதான் ஒரே வழி’.. தாலிபான்களுக்கே ‘தண்ணி’ காட்டும் அமைப்பு..!
- என்னணே சொல்றீங்க!?.. 'ஒரு செகண்ட்ல... 319 TB' டவுன்லோடிங் ஸ்பீடா!?.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!
- ‘எனக்கு வேற வழி தெரியல’.. மரத்துக்கு கீழே டென்ட், கையில் லேப்டாப்.. இளம்பெண் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
- 'ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா'?... 'சொடக்கு போடுற நேரத்துல படம் டவுன்லோடு ஆகும்'... ஏர்டெலின் அல்டிமேட் சர்ப்ரைஸ்!
- 'ஸ்பீட் வேற லெவெலில் இருக்கும்'...'இந்தியாவில் எப்போது '5G'?... ஏர்டெல் & ஜியோவின் பிளான் என்ன?
- 'ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா!'... ‘தமிழக’ அரசின் ‘அசத்தல்’ அறிவிப்பு! ‘மகிழ்ச்சிப் பொங்கலில்’ கல்லூரி மாணவர்கள்!
- ‘வேற லெவல் ஓடிடி சலுகைகள்!’.. ஜியோ பிராட்பேண்ட் பயனாளர்களுக்கான அதிரடி ஆஃபர்கள்!