"அது தொலைஞ்சு 7 வருசம் ஆச்சு.." வீட்டுக்கு வந்த பார்சலை பார்த்து ஆடிப் போன நபர்.. "இப்டி கூடவா அதிர்ஷ்டம் அடிக்கும்.."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய பொருள் ஒன்றை தொலைத்த நபருக்கு, பல ஆண்டுகளுக்கு பின் இன்ப அதிர்ச்சி ஒன்று வந்து சேர்ந்துள்ளது.

Advertising
>
Advertising

மாஞ்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த ஆண்டி எவன்ஸ் என்பவர் (வயது 45), கடந்த 2015 ஆம் ஆண்டின் போது, டாக்சி ஒன்றில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, தன்னுடைய பர்ஸினை டாக்சியிலேயே தொலைத்துள்ளார் ஆண்டி எவன்ஸ். அதற்குள் அவரின் டிரைவிங் லைசன்ஸ், வங்கி தொடர்பான அட்டைகள் மற்றும் £135 (இந்திய மதிப்பில் சுமார் 12 ஆயிரம் ரூபாய்) பணமும் இருந்துள்ளது.

டாக்சியில் தொலைந்த பர்ஸ்

தன்னுடைய பர்ஸ் தொலைந்தது பற்றி, டாக்சியில் இருந்து இறங்கிய பின்னர் தான், ஆண்டிக்கு தெரிய வந்துள்ளது. டாக்சி எந்த நிறுவனத்தை சேர்ந்தது என்பதும் அவருக்கு தெரியவில்லை. மேலும், அதனை தொடர்பு கொள்வதற்கான வழிகளும் அவருக்கு அமையவில்லை. தன்னுடைய பர்ஸ் தொலைந்து விட்டது என முடிவு செய்த ஆண்டி எவன்ஸ், அதனை கடந்து விட்டு வேறு வேலைகளை பார்த்து வந்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு..

அப்படி இருக்கையில் தான், 83 மாதங்களுக்கு பிறகு, அதாவது சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு, மிகப் பெரிய ட்விஸ்ட் ஒன்று அரங்கேறி உள்ளது. இத்தனை நாட்களுக்கு பிறகு, எவன்ஸின் தொலைந்து போன பர்ஸ், அவருடைய வீடு தேடி வந்து சேர்ந்துள்ளது. டெலிவரி மூலம் வந்து சேர்ந்த பார்சலை திறந்து பார்த்த எவன்ஸிற்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

பர்ஸ் மட்டுமில்லாமல், அதற்குள் இருந்த பணம், லைசன்ஸ் உள்ளிட்ட அனைத்தும் அப்படியே இருந்துள்ளது. இதனை அனுப்பிய நபர், மான்செஸ்டர் டாக்சி டிரைவர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். பழைய டாக்சி ஒன்றில், இந்த பர்ஸ் கிடைத்ததாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, அதில் ஒரு மெயில் ஐடியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழம்பி போன உரிமையாளர்

7 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த பர்ஸ் அப்படியே கிடைத்ததால், தலை கால் புரியாமல் குழம்பி போயுள்ளார் ஆண்டி எவன்ஸ். தொடர்ந்து, தனது டெலிவரியில் இருந்த மெயில் ஐடிக்கு, 7 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த பர்ஸ் மீண்டும் என்னிடம் சேர்த்ததற்காக மிக்க மிக்க நன்றி என குறிப்பிட்டு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து, அந்த நபரும், "அற்புதமான செய்தி. என்னிடம் இதனை தெரியபடுத்தியதற்கு நன்றி. 7 வருடங்கள். Wow. பழைய டாக்சி ஒன்றில் இருந்து இந்த பர்ஸ் என்னிடம் கிடைத்தது. உங்களின் அனைத்து பொருட்களும் அதில் உள்ளது என நம்புகிறேன். வங்கிக்கு சென்று, அதிலிலுள்ள பணத்தை புதுப்பித்து மகிழுங்கள்" என பதிலளித்துள்ளார்.

7 ஆண்டுகள் ஆனதால், அதில் இருந்த சில பணம், பயன்பாட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது. 7 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன பர்ஸ், அப்படியே திரும்ப கிடைத்துள்ள சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

WALLET, MONEY, 7 YEARS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்