"என்னோட காஸ்ட்லி BAG-ல என்ன பண்ணிருக்காருன்னு பாருங்க".. முன்னாள் காதலன் மீது வழக்கு போட்ட இளம்பெண்.. பரபரப்பான நீதிமன்றம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் காதலியை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட இளைஞருக்கு 91 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது நீதிமன்றம்.
Also Read | சட்டுன்னு அதிகரித்த கொரோனா பாதிப்புகள்.. சீன அரசு எடுத்த முடிவு.. பரபரப்பான உலக நாடுகள்..!
காதலில் இருக்கும் நபர்கள் தங்களது இணையை கவர பல வழிகளில் முயல்வதை பார்த்திருக்கிறோம். சர்ப்ரைஸாக பல திட்டங்களை யோசித்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்த துணிச்சலுடன் களத்தில் இறங்குபவர்களை பற்றியும் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சில சமயங்களில் காதலர்களுக்குள் பிரிவு ஏற்படும்போது அவர்களுக்குள் இருந்த அன்பு மறைந்து பழிவாங்கும் எண்ணம் தலைதூக்கிவிடும். சில வினாடிகள் ஏற்படும் இந்த அதீத கோபத்தை கட்டுப்படுத்த தவறுபவர்கள் பின்னாளில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகவும் நேரிடும். அப்படித்தான் நடந்திருக்கிறது தென் கொரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும்.
வாக்குவாதம்
தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்-கு குதியில் உள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது தான் அதிகமாக செலவு செய்துவருவதாகவும் அதனால் கடனாளி ஆகிவிட்டதாகவும் அந்த பெண் கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் நேரடியாக பெண்ணின் அறைக்குள் சென்றிருக்கிறார். அங்கிருந்த அவரது விலையுயர்ந்த பையில் சிறுநீர் கழித்திருக்கிறார்.
வழக்கு
இதனை அறிந்த பெண், உடனடியாக தனது காதலன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த விசாரணையின்போது தான் அந்த பையில் சிறுநீர் கழிக்கவில்லை என்றும், அவ்வாறு நடித்ததாகவும் இளைஞர் கூறியுள்ளார். ஆனால், உண்மையை கண்டறிய மரபணு சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. இதை தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் அந்த இளம்பெண்ணின் பையில் வாலிபரின் டிஎன்ஏ இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், தனது தவறை மறைக்க பையில் வாசனை திரவியத்தை அவர் தெளித்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில் வாலிபரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. மேலும், தனது முன்னாள் காதலியை பழிவாங்கும் நோக்கில் அவருடைய விலையுயர்ந்த பையில் சிறுநீர் கழித்த வாலிபருக்கு 1,150 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.91,634) அபராதமாக விதித்துள்ளது நீதிமன்றம்.
Also Read | கேமராவில் சிக்கிய அரியவகை வெள்ளை மான்.. மீண்டும் வைரலாகும் வீடியோ.. ஆய்வாளர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்.!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே ஒரு Airpod-க்காக.. 7,000 கி.மீ தூரம் பறந்த இளைஞர்.. "செலவு மட்டும் 2 லட்சத்துக்கும் மேலயாம்.." காரணம் அறிந்து மிரண்டு போன நெட்டிசன்கள்
- "என்னை விட 10 வயது மூத்த பெண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க".. புது மாப்பிள்ளை செஞ்ச காரியம்.. பதறிப்போன உறவினர்கள்.!
- "விவாகரத்து வேண்டாம்".. சமரசம் செய்து அனுப்பிய நீதிபதிகள்.. வெளிய வந்த உடனே கணவர் செஞ்ச காரியம்.. வெலவெலத்துப்போன மக்கள்.!
- 36 வருசமா நடந்த முயற்சி.. ஒரே நாளில் தலை கீழாக மாறிய வாழ்க்கை.. "இவ்ளோ நாள் பட்ட ஆசை இன்னைக்கி பலிச்சுடுச்சு"
- "நாலு வருஷமா இதான் பண்ணுறாரு.." வேலையே பாக்காம சம்பளம் வாங்கும் வாலிபர்.. மிரண்டு போன நெட்டிசன்கள்
- "நான் மறுபிறவி எடுக்க போறேன்.." திரைப்படம் பாத்துட்டு இளைஞர் எடுத்த முடிவு.. கடைசியில் நடந்த 'விபரீதம்'!!
- 20 ரூபாயால் தொடரப்பட்ட வழக்கு.. "சுமார் 22 வருசத்துக்கு பிறகு வந்த பரபரப்பு தீர்ப்பு.!!"
- உலகின் மிகவும் காரமான மிளகாய்.. மனுஷன் அதேயே அசால்ட் செஞ்சிருக்காரே.. கின்னஸ் அதிகாரிகளே ஷாக் ஆகிட்டாங்க.. !
- ராத்திரி மது போதையில் இருந்த வாலிபர்.. "நடுவுல கண் முழிச்சு பாத்தப்போ, பெட்டிக்குள்ள இருந்துருக்காரு.." நடுங்க வைத்த பின்னணி
- "இப்படி ஒரு சம்பவத்தை நாங்க கேள்விப்பட்டதில்ல".. பீச்-ல வாக்கிங் போனவர் பார்த்த பயங்கர காட்சி.. விசாரணையில் குழம்பிப்போன அதிகாரிகள்..!