மனைவியை பாத்து 2 வருஷமாச்சு.. 2000 கிமீ கடலை கடக்க முடிவெடுத்த கணவர்..நிஜ Life of Pi..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இரண்டு வருடமாக மனைவியை காணாமல் தவித்து வந்த கணவர் ஒருவர், தனியாளாக படகில் கடலை கடக்க முடிவெடுத்து கிளம்பியிருக்கிறார்.

மனைவியை பாத்து 2 வருஷமாச்சு.. 2000 கிமீ கடலை கடக்க முடிவெடுத்த கணவர்..நிஜ Life of Pi..!
Advertising
>
Advertising

கொரோனா

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று உலகில் பரவத் துவங்கியது. சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் பரவிய கொரோனா, மனித குலத்திற்கே மாபெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. இதனால் உயிரிழப்புகள், வேலைவாய்ப்பின்மை என பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்று காரணமாக, பயண கட்டுப்பாடுகளை விதித்தன. அதன் காரணமாக தங்களது அன்புக்குரியவர்களை சந்திக்க முடியாமல் உலக மக்கள் ஸ்தம்பித்தனர். அவர்களில் ஒருவர்தான் வியட்நாம் நாட்டை சேர்ந்த ஹோ ஹவாங் ஹங் (Ho Hoang Hung). இவருடைய மனைவி மும்பையில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா காரணமாக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இவரால் தன் மனைவியை சந்திக்க முடியாமல் போயிருக்கிறது.

பயணம்

இதனை அடுத்து தனியாளாக சிறிய படகில் மும்பைக்கு வர திட்டமிட்டிருக்கிறார் இந்த நபர். வியட்நாமில் இருந்து தாய்லாந்தின் புக்கெட் தீவை வந்தடைந்த ஹங், ரப்பர் படகு மூலமாக வங்காள விரிகுடா கடலை கடக்க திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை தாய்லாந்து நிலப்பரப்பில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிமிலன் தீவுகளுக்கு அருகில் ஹங் பயணிக்கையில் மீன்பிடி படகு ஒன்று அந்த வழியாக வந்திருக்கிறது.

கடலில் தனியாளாக ஒருவர் பயணித்துவருவதாக அந்த படகில் இருந்தவர்கள் தாய்லாந்து கடற்படைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படை அதிகாரிகள் ஹங்கை கைது செய்தனர்.

மனைவியை பார்க்க

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தாய்லாந்து கப்பற்படை பாதுகாப்பு அதிகாரி ஒருவர்," அவரிடம் வரைபடமோ, திசைகாட்டியோ, GPS வசதியோ இல்லை. மாற்றிக்கொள்ள உடைகள் கூட கிடையாது. உடனடியாக தயார் செய்யும் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டிகள் சிலவற்றுடன் அவர் பயணத்தை துவங்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் மும்பையில் வேலை பார்த்துவரும் தனது மனைவியை காண புறப்பட்டதாக கூறினார்" என தெரிவித்தார்.

COVID19, TRAVEL, THAILAND, கோவிட்19, தாய்லாந்து, பயணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்