"என்னடா சொல்றே??... நீ என்னோட அண்ணனா??... ஒரே 'ஸ்கூல்'ல படிச்சப்போ கூட தெரியாம போச்சே..." அதிர்ந்து போன 'இளைஞர்'... இது வேற 'லெவல்' சோதனை!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

24 வயதேயான இளைஞர், தனது தந்தை குறித்து அறிய வந்த ஒரு தகவலால், வேடிக்கையான மற்றும் இக்கட்டான சூழ்நிலை என இரண்டுக்கும் நடுவே தவித்து வருகிறார்.

அமெரிக்காவின் ஓரிகன் (Oregon) என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஷேவ் ஃபோர்ஸ் (Zave Fors). இவரின் தந்தை செய்து வைத்த ஒரு செயல் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. அவரது தந்தை, அவரின் விந்தணுவை (Sperms) 500 முறை விற்பனை செய்ததை இணையதளம் ஒன்றின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார். இதனால், டேட்டிங் ஆப் பயன்படுத்தவும் அவர் பயந்து வருகிறார்.

காரணம், இதன் மூலம் தனது உடன் பிறந்தவர்களுடன் உரையாடி, உடலுறவில் முடியக் கூடுமோ என்ற அச்சம் தான். கடந்த சில ஆண்டுகளில் நடத்திய தேடுதலுக்குப் பின், இதுவரை 8 உடன் பிறப்புகளை அவரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. அவர்களுடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வருகிறார் ஃபோர்ஸ்.

இதில், ஃபோர்ஸ் தனது உடன்பிறப்புகளை பற்றித் தேடிய போது, சகோதரர் ஒருவரை கண்டுபிடித்தார். அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஃபோர்ஸ் படித்த அதே பள்ளியில் படித்து வந்த டேரன் என்பவர் அவருடைய சகோதரர் என்பது தான் அது. இருவரும் பள்ளிப் பருவத்தில் ஒன்றாக இருந்ததை நினைவு கூறும் ஃபோர்ஸ், நானும் டேரனும் சகோதரர்கள் என்பதை தெரியாமலே ஒரே பள்ளியில் படித்துள்ளோம் என்கிறார்.


இன்னும் வேறு இரண்டு சகோதரர்களும், இதே போல வேறொரு பகுதியில், ஒரே கட்டிடத்தில் தாங்கள் சகோதரர்கள் என்பது தெரியாமல் நீண்ட காலம் வாழ்ந்து வந்துள்ளதையும் ஃபோர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

'எனக்கு மொத்தம் எத்தனை உடன்பிறப்புகள் இருக்கிறார்கள் என்பது தெரியாததால் டேட்டிங் செயலி மூலம் ஒருவருடன் பேசுவதற்கே பயமாக உள்ளது. டிண்டர் போன்ற செயலியில் வலம் வரும் போது, என்னுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்னுடைய உடன் பிறப்புகளா என்ற குழப்பம் வந்து விடுகிறது' என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட மொத்த பயத்தையும் போக்க, தனது உடன்பிறப்புகள் மற்றும் குடும்பத்தினர்களை கண்டுபிடிக்கும் பணியை தீவிரமாக தொடர்ந்து வருகிறார் ஃபோர்ஸ்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்