VIDEO: ‘சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குடா சாமி’.. ஏர்போர்ட்டில் இளைஞர் செஞ்ச சேட்டை.. வைரலாகும் ‘சிசிடிவி’ வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விமான நிலையத்தில் சேட்டை செய்த இளைஞரின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குடா சாமி’.. ஏர்போர்ட்டில் இளைஞர் செஞ்ச சேட்டை.. வைரலாகும் ‘சிசிடிவி’ வீடியோ..!

ரஷ்யாவின் ஷெரெமெட்டியோ (Sheremetyevo) சர்வதேச விமான நிலையத்துக்கு மதுபோதையில் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அப்போது பொருட்களை ஸ்கேன் செய்து அனுப்பும் ரன்வேவுக்கு நுழைந்து அவர் வந்துள்ளார்.

Man takes ride on airport conveyor belt goes viral

இதனை அடுத்து பொருட்கள் செல்லும் கன்வேயர் பெல்ட்டை பாதை என நினைத்து அதில் நடந்து சென்றுள்ளார். ஆனால் கன்வேயர் பெல்ட் நகர்ந்து கொண்டே இருந்ததால், நிலைதடுமாறி அதிலேயே விழுந்துள்ளார். அப்போது அவரது பை கம்பி ஒன்றில் சிக்கிக் கொள்ள அதை எடுக்க முயன்று, பின்னர் பையுடனே கன்வேயர் பெல்ட்டில் சென்றுள்ளார்.

Man takes ride on airport conveyor belt goes viral

இந்த சம்பவங்கள் அனைத்தும் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர் யால்டா நகரத்தில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விமான நிலைய விதிகளை மீறியதாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நபர் கடந்த ஆண்டு லாஸ் வேகஸ் விமான நிலையத்தில், புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கை மீது ஏறி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்