'வேலை போர் அடிக்கிறது...'- கம்பெனி முதலாளியிடம் லட்சக் கணக்கில் நஷ்ட ஈடு கேட்ட ஊழியர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வேலை போர் அடிக்கிறது என்பதால் தனது நிறுவன முதலாளி மீது வழக்கு தொடர்ந்து அதன் மூலமாக நஷ்ட ஈடும் பெற்றுள்ளார் இளைஞர் ஒருவர்.

Advertising
>
Advertising

பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவர் ஃபெட்ரிக் டெஸ்னார்டு. இவர் பாரிஸில் உள்ள ஒரு காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தில் 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். ஒரு நாள் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர் ஒருவரை இழப்பதற்கு காரணமாகி விட்டதால் இவருக்கு அலுவலகத்தில் மரியாதை குறைந்து காணப்பட்டுள்ளது.

மேனேஜர் அந்தஸ்த்தில் இருந்தவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வேலை எதுவும் கொடுக்கப்படவில்லை. நிறுவனத்தின் தலைவருக்கு காபி வாங்கி வருவது, கடைகளுக்குச் சென்று வருவது என ஒரு மேனேஜருக்கு ஆபிஸ் பாய் வேலைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் மிகவும் மனம் நொந்து போயுள்ளார் ஃபெட்ரிக்.

4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் இருந்து 2015-ம் ஆண்டு வெளியேற்றப்பட்டார் ஃபெட்ரிக். கார் விபத்து காரணமாக ஓய்வில் இருந்தவரை வேலையை விட்டே அனுப்பியுள்ளது அந்த நிறுவனம். அடுத்த ஆண்டே தனது நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ஃபெட்ரிக்-க்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது.

ஊழியரின் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ஆக அவர் பணியாற்றிய நிறுவனம் சுமார் 40,000 பவுண்டுகளை இழப்பீடு ஆக வழங்க உத்தரவு இடப்பட்டது. சுமார் இந்திய மதிப்பில் 33 லட்சம் ரூபாய் ஆகும்.

JOBS, EMPLOYER, BORING JOB, COMPENSATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்