"சம்பளம் ₹1.03 கோடி.. ஆனா வேலையே கொடுக்க மாட்டேங்குறாங்க".. கோர்ட்டுக்கு போன ஊழியர்.. யாரு சாமி இவரு..?
முகப்பு > செய்திகள் > உலகம்அயர்லாந்து நாட்டில் தனக்கு தகுந்த வேலை கொடுக்கப்படவில்லை என தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஊழியர் ஒருவர். இந்த வழக்கு பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
Also Read | கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா?.. சீன ஆய்வக விஞ்ஞானி சொல்லிய பதற வைக்கும் தகவல்..!
பொதுவாக வேலை செய்யும் இடங்களில் ஆரோக்கியமான பணிச் சூழலில் இருக்க வேண்டும் என பலரும் விரும்புவது உண்டு. வேலை பளுவும் அதிகப்படியான நேரம் பணி செய்தல் அதன் காரணமாக வரும் மன உளைச்சல் என பல ஊழியர்கள் பேசி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டர்மோட் அலாஸ்டர் மில்ஸ் என்பவருக்கு வித்தியாசமான பிரச்சனை வந்திருக்கிறது. இந்த சிக்கல் நீதிமன்றம் வரையிலும் தற்போது சென்றிருக்கிறது. அப்படி என்னதான் அவருக்கு பிரச்சனை?
அயர்லாந்தின் டப்ளின் பகுதியைச் சேர்ந்தவர் மில்ஸ். இவர் ஐரிஷ் ரயில் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆண்டுக்கு ஒரு கோடியே மூன்று லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தனது நிறுவனத்தின் மீது தற்போது வழக்கு தொடர்ந்திருக்கிறார் மில்ஸ். இது குறித்து அவர் பேசுகையில் "தினந்தோறும் அலுவலகத்தில் என்னுடைய அறைக்குச் சென்று கணினியை ஆன் செய்து மின்னஞ்சல்களை பார்ப்பேன். ஆனால் எனக்கென எந்த மின்னஞ்சலும் வந்திருக்காது. என்னுடன் பணியாற்றுபவர்கள் கூட எனக்கென எந்த மின்னஞ்சலையும் அனுப்புவதில்லை. பெரும்பாலும் அலுவலகத்தில் செய்தித் தாள்களை படிப்பது, சாண்ட்விச் சாப்பிடுவது, வாக்கிங் செல்வது இதைத்தான் மீண்டும் மீண்டும் செய்து வருகிறேன்" என தெரிவித்திருக்கிறார்.
கடந்த 9 ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மில்ஸ் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு சென்று வருகிறார். அதிலும் தான் பெரிதாக எந்த வேலையையும் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் அவருடைய புகாருக்கான காரணம். மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது கம்பெனியில் நடைபெற்ற நிதி மோசடி குறித்து தான் அம்பலப்படுத்தியதாகவும் அதிலிருந்து என்னை மூத்த பணியாளர்கள் ஓரங்கட்டி வருவதாகவும் குற்றஞ்சாட்டி இருக்கிறார் மில்ஸ்.
இதன் காரணமாக தன்னுடைய திறமைகள் மட்டுப்படுத்தப்படுவதாகவும், எந்தவித பதவி உயர்வும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து அயர்லாந்தில் உள்ள தொழிலாளர்களுக்கான ஆணையத்தில் மில்ஸ் வழக்கு தொடர அங்கே இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இறந்துட்டாருன்னு திதி கொடுத்த குடும்பம்.. 25 வருசம் கழிச்சு தெரிய வந்த உண்மை.. இன்ப அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
- கடலுக்கு நடுவே தத்தளித்த நபர்.. பத்திரமாக மீட்டதும் சொன்ன விஷயம்.. அதிர்ந்து போன மீனவர்கள்!!
- ஒரே ஒரு கொசுவால்.. கோமாவுக்கு போன இளைஞர்.. "கூடவே 30 ஆபரேஷனும்".. மனதை ரணமாக்கும் பயங்கரம்!!
- மெடிக்கல் போயிட்டு வர்றேன்னு போன கணவர்.. Wait பண்ண மனைவிக்கு 1 1/2 வருஷம் கழிச்சு காத்திருந்த ஷாக்!!
- திருமண நிகழ்ச்சியில்.. உற்சாகமா ஆடிட்டு இருந்த மனுஷன்.. ஒரு செகண்ட்ல நடந்த விபரீத சம்பவம்.. பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!
- கனவுல தொல்லை கொடுத்து வந்த பாம்பு.. பரிகாரம் பண்ண போனவரின் நாக்குலயே கொத்திய பரபரப்பு சம்பவம்..
- "தெய்வமே.. வேலை கிடைச்சிடுச்சா".. கூகுளில் செலெக்ட் ஆன மகன்.. சந்தோஷத்தில் அம்மா கொடுத்த ரியாக்ஷன்.. வீடியோ..!
- கல்யாணமான 5 மாசத்துல மணப்பெண்ணுக்கு நடந்த துயரம்.. போலீசுக்கு உறுத்தலா இருந்த ஒரு விஷயம்.. கடைசியில வெளியான அதிர்ச்சி தகவல்..!
- ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த பயங்கரம்.. இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் செஞ்ச பகீர் காரியம்..!
- ராணுவ சீருடையில் 4 மாதங்கள் வேலை பார்த்த பிறகு.. இளைஞருக்கு தெரிய வந்த அதிர்ச்சி!!.. பணத்தையும் இழந்த பரிதாபம்..