‘உடம்பு தீயா கொதிக்குது’.. ‘காய்ச்சல் வேற இருக்கு’.. என்ன ஆச்சு உங்களுக்கு?.. போலீஸை மிரள வைத்த பதில்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் பைக் மூலம் பல இடங்களுக்கு சுற்றி வந்துள்ளார். இதனிடையே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இந்த நபரை போலீசார் நிறுத்தி கொரோனா பாதிப்பு உள்ளதா என தெர்மல் பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் அவருக்கு அதிக ஜுரம் இருப்பதும், உடம்பு சூடாக கொதித்ததையும் அறிந்துள்ளனர். இதனால் கொரோனா அறிகுறி இருக்குமோ என சந்தேகித்த போலீசார், உடம்பு ஏன் இப்படி கொதிக்கிறது என கேட்டுள்ளனர். அதற்கு ‘கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க மதுகுடித்தேன். அதனால் உடம்பு சூடாக உள்ளது’ என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் மதுகுடித்து வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதித்து, மதுகுடிப்பதால் கொரோனா குணமாகாது என அறிவுரை சொல்லி அனுப்பியுள்ளனர்.

CORONAVIRUSOUTBREAK, COVID2019, PHILIPPINES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்