VIDEO: ‘அய்யோ அந்த காரை எப்படியாவது நிறுத்துங்க’!.. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார்.. வேறலெவல் ‘ஐடியா’ செய்து நிறுத்திய இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கட்டுப்பாட்டை இழந்து சென்ற காரை சாதூர்யமாக நிறுத்தி பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Advertising
>
Advertising

நெதர்லாந்து நாட்டின் சாலை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென்றுள்ளது. சாலையின் ஓரமாக உள்ள புற்களின் மீது அங்குமிங்கும் ஓடியுள்ளது.

இதைப் பார்த்த மற்றொரு கார் ஓட்டுநர், உடனே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய காருக்கு முன்னாள் தனது காரை நிறுத்தியுள்ளார். இதனை அடுத்து அந்த காரின் மீது மோதி இந்த கார் நின்றுள்ளது. இதனைத் தொடர்ந்து வேகமாக வந்த நபர், காரின் கதவை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது பெண் ஒருவர் சுயநினைவு இன்றி மயங்கி கிடந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து வேகமாக ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் மற்றொரு காரில் பொருத்தப்பட்டுள்ள Dashcam என்ற கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், பெண்ணைக் காப்பாற்றிய நபருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்