'நண்பருடன் பேசி கொண்டிருந்த மனைவி'... 'தவறுதலாக கைப்பட்டு கணவரின் மொபைலுக்கு போன கால்'... மனைவி பேசியதை கேட்டு நொறுங்கிப்போன கணவன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் Gareth rees. இவரது மனைவி claire. இவர்கள் இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்றுள்ளார்கள். விவாகரத்து பெற்றாலும் Gareth மனைவியின் நினைவாகவே இருந்துள்ளார். இதனால் மனைவிக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அப்போது Garethயின் மனைவி claire, ஒரு ஹோட்டலில் தனக்குப் புதிதாக அறிமுகமான நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது தனது கணவரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை அவர் கவனித்துள்ளார்.

இதையடுத்து தனது புதிய நண்பருடன் பேசிக் கொண்டே கணவரின் குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்ப இருந்த நிலையில், தவறுதலாக claire தனது கணவருக்கு போன் செய்து விட்டார். மனைவியிடம் இருந்து அழைப்பு வந்ததைப் பார்த்துச் சந்தோசப்பட்ட Gareth போனை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் யாரும் பேசாத நிலையில், Garethயின் மனைவி claire யாரோ ஒரு நபருடன் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.

சிறிது நேரம் கழித்துத் தான் claire தனக்குத் தவறுதலாக போன் செய்ததை Garet உணர்ந்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கொஞ்சம் நேரம் கேட்ட Garet அதிர்ச்சியில் உறைந்து போனார். claire தான் புதிதாகச் சந்தித்த நண்பருடன் பாலுறவு கொள்வதைக் குறித்துப் பேசிக் கொண்டு இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து தனது கணவரின் குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பினேனா என claire பார்த்தபோது தான் அவர் தவறுதலாக போன் செய்த விஷயம் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த claire உடனடியாக தனது கணவனைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த Garethயின் நண்பர், அவர் இங்கு இல்லை. Garethயின் நண்பர் வெளியூருக்குச் சென்றிருப்பதால் அவரின் வீட்டைக் கவனித்துக் கொள்ள அங்குச் சென்றிருப்பதாக அந்த நபர் கூறியுள்ளார். உடனே அவர் குறிப்பிட்ட இடத்திற்கு claire சென்று பார்த்தபோது, Gareth மது போதையில் நீச்சல் குளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார்.

உடனே மருத்துவ குழுவினர் வந்து Garethயை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்கள். கடும் மன அழுத்தத்தால் Gareth இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். தனது தவறுதலான தொலைப்பேசி அழைப்பு தான் கணவரின் இந்த நிலைக்குக் காரணம் என்ற குற்ற உணர்ச்சியுடன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என claire உருக்கத்துடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்