ஒரே நாளில் ‘10 டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்.. எப்படி நடந்தது..? மிரண்டுபோன சுகாதாரத்துறை அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரே நாளில் 10 டோஸ் கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஒவ்வொரு நாடுகளிலும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நாடுகளில் மூன்றாவதாக ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் ஒரு நபர் ஒரே நாளில் 10 டோஸ் கொரனோ தடுப்பூசி எடுத்துக்கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், ‘குறிப்பிட்ட ஒரு நபர் மட்டும் ஒரே நாளில் பல தடுப்பூசி மையங்களுக்குச் சென்று நிறைய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார். இதற்காக அவர் வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி இருக்கிறார். தடுப்பூசி போட யாருடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு தடுப்பூசி போடவில்லை. அவர்களது பெயரில் இந்த நபர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். ஏனென்றால் பல தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வதால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஆக்லாந்து பல்கலைக்கழக தடுப்பூசி நிபுணர் ஹெலன் பெட்டூசிஸ்-ஹாரிஸ் (Helen Petousis-Harris), ‘இதுபோன்ற ஏராளமான தடுப்பூசிகள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த தரவுகள் எதுவும் தற்போது இல்லை. ஆனால் ஒரு நாளைக்கு 10 டோஸ் எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று சொல்வது மிகவும் கடினம். ஆனால் அவ்வாறு எடுத்துக் கொள்வது நிச்சயம் பாதுகாப்பானது இல்லை என்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்’ என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் நியூசிலாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CORONA, COVID19VACCINE, NEWZEALAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்