இதல்லவோ PROPOSAL.. காதலியை திகைக்க வைச்ச இளைஞர்.. கடைசியில நடந்த வாவ் மொமெண்ட்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் பாடலுக்கு நடனமாடியபடி காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காதல் பல வினோதமான காரியங்களில் மனிதர்களை ஈடுபட வைக்கும். தங்களது காதலுக்கு உரியவர்களை கவர, என்னவேண்டுமானாலும் செய்ய காதலர்கள் தயங்குவதில்லை. குறிப்பாக இணையை பார்க்க காதலர்கள் எடுக்கும் முயற்சிகள் வெகு சுவாரஸ்யமானவை. அதிலும், முதன்முதலில் தங்களது காதலை வெளிப்படுத்த மனிதர்கள் எடுக்கும் முயற்சிகள் சுவாரஸ்யமிக்கவை. ஒருபுறம், தங்களது காதலை, தங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்திவிட துடிப்பவர்கள், எந்த துணிச்சலான காரியத்திலும் ஈடுபடுவார்கள். அந்த வகையில் இளைஞர் ஒருவர் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் முன்பு தனது காதலியை கவர நடனமாடுகிறார்.
இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதேபோல, இந்த இணை குறித்தும் தகவல்கள் பகிரப்படவில்லை. இந்த வீடியோவில், ஈபிள் டவர் அருகே ஆற்றங்கரையில் ரோஜா இதழ்களால் 'Marry Me' என்ற அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சிவப்பு கம்பள விரிப்பில் இருபுறமும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.
இந்த செட்டப்பை பார்த்து அந்த இளம்பெண் திகைத்து நிற்க அவருக்கு அடுத்த ஆச்சர்யத்தை அளிக்கிறார் இளைஞர். பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கானின் குச் குச் ஹோதா ஹை (Kuch Kuch Hota Hai) படத்தில் வரும் கோய் மில் கையா (Koi Mil Gaya) பாடலுக்கு அந்த இளைஞர் நடனமாடுகிறார்.
இளைஞர் நடனமாட, அதனை பிரம்மிப்போடு பார்த்துக்கொண்டிருந்த இளம்பெண்ணும் உடன் சேர்ந்து ஆடுகிறார். இந்த வீடியோவை 3.1 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். மேலும், 18 ஆயிரம் பேர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர். இதனிடையே நெட்டிசன்கள்,"ஸ்வீட் ப்ரோபோசல்" என்றும்,"முன்கூட்டியே திட்டமிட்டு இந்த இளைஞர் செயல்பட்டிருக்கிறார்" என்றும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர். இது ஒருபக்கம் இருந்தாலும் பலரும் இந்த இளைஞரின் முயற்சிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே வீடியோவால் பிரபலமான கோலியின் தீவிர Fan Girl.. அடிச்ச ஷாட்களை பாத்துட்டு அரசு கொடுத்த பரிசு.. சிலிர்த்துப்போன ரசிகர்கள்.!
- ஜப்பானில் தொடங்கிய Loves.. கிருஷ்ணகிரில வெச்சு கல்யாணம்.. தைவான் பெண்ணை கரம்பிடித்த தமிழன்!! சுவாரஸ்யம்!!
- "எங்கப்பா கஷ்டப்பட கூடாது சார்".. அப்பாவுக்கு உதவி செய்ய போராடும் மகன்.. IAS அதிகாரி பகிர்ந்த நெகிழவைக்கும் வீடியோ..!
- ஏழு வருசமா ஆன்லைன் மூலம் லவ்!!.. இனிமே காதலன் கூட வாழலாம்'ன்னு முடிவு எடுத்து கிளம்பிய பெண்ணுக்கு சில மாசத்துல நேர்ந்த துயரம்!!
- 48 வயசுல விவாகரத்து.. துணை தேடி செயலியில் நேரம் செலவிட்ட பெண்.. "இப்டி ஒரு ட்விஸ்ட் நடக்கும்'ன்னு எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க"
- எழுதுறாங்களா இல்ல வரையுறாங்களா?.. நெட்டிசன்களை பொறாமைப்பட வச்ச வீடியோ.. யாருப்பா அவரு..?
- கேன்சரால் பாதிக்கப்பட்ட காதலி.. "சிகிச்சை'ல இருந்தப்போ" ஆசையா கேட்ட விஷயம்.. களத்தில் இறங்கி அசத்திய காதலன்!!
- "குலோப்ஜாமூன்-லாம் எடுத்துட்டு போக கூடாது".. பயணியிடம் கறார் காட்டிய ஏர்போர்ட் அதிகாரிகள்.. சட்டுன்னு பயணி செஞ்ச காரியம்.. வீடியோ..!
- லைஃப்-ல உங்களுக்கு கிடைச்ச சிறந்த Gift எது..? தல தோனி சொன்ன ஜாலி பதில்.. ட்ரெண்ட் ஆகும் Throwback வீடியோ..!
- உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சிவன் கோவில்.. 360 டிகிரியில் எடுக்கப்பட்ட பரவசமூட்டும் வீடியோ..!