"இப்படியா லவ் Propose பண்றது?".. இளைஞரின் செயலால் அதிர்ந்த மைதானம்.. கடைசியில் அவரே வெச்ச ட்விஸ்ட்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வபோது சமூக வலைத்தளங்களில் நாம் நேரத்தை செலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.
அதிலும், பலரும் தங்களின் மனதுக்கு நெருக்கமான நபர்களிடம் காதலை வெளிப்படுத்துவது தொடர்பாக எக்கச்சக்க வீடியோக்கள் வைரல் ஆவதை நம்மில் பலரும் பார்த்திருப்போம்.
ஒரு நபர் காதலை வெளிப்படுத்தும் போது எதிரே உள்ள நபர் அதற்கு ஓகே சொல்லி விட்டால் அதை விட பெரிய ஆனந்தம் நிச்சயம் எதுவும் இருந்து விடாது. அப்படி நல்ல முடிவாக அது வந்து விட்டால் நிச்சயமாக அவர்கள் இருவரும் இணைந்து வாழும் சமயத்தில், அந்த தருணம் மிக மிக முக்கியம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படும்.
இதன் காரணமாக தான் காதலிக்கும் நபரிடம் Love Propose செய்யும் போது பல வித்தியாசமான வழிகளையும் ஏராளமானோர் பின்பற்றுவார்கள். சில நேரங்களில் கிரிக்கெட் மைதானம் அல்லது கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நடுவே தங்களின் காதலை அவர்கள் வெளிப்படுத்தும் சமயத்தில் அது மிக மிக மெய்சிலிர்க்க வைக்கும் தருணமாகவும் இருக்கும். அந்த வகையில் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தை அதிகம் கலக்கி வருகிறது.
இது தொடர்பாக தற்போது வைரலாகும் வீடியோ ஒன்றில், கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது இரண்டு அணி வீரர்கள் Warm Up செய்து கொண்டிருக்கும் சமயத்தில் மைதானத்திற்குள் ரசிகர் ஒருவர் ஏறி குதித்து செல்கிறார். அந்த சமயத்தில் அவர் திடீரென கீழே விழ காலில் ஏதோ காயம் ஏற்பட்டது போல அவர் மைதானத்தில் துடிக்கவும் செய்கிறார்.
இதனைக் கண்டதும் அங்கே நிற்கும் சிலர் அவரை எழுப்பி என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ளவும் முயற்சிக்கின்றனர். அப்போது அவருடன் வந்த பெண் ஒருவரும் என்ன ஆனது என பார்ப்பதற்காக அந்த ரசிகரின் அருகே மைதானத்தில் வருகிறார். இதனால் சற்று பரபரப்பான சூழலும் அங்கே உருவாகும் நிலையில், யாரும் எதிர்பாராத மற்றொரு சம்பவம் அங்கே அரங்கேறுகிறது.
அவருடன் வந்த பெண் அருகே வந்ததும் திடீரென எழுந்து முழங்காலிட்டு மோதிரத்தை கொடுத்து தனது காதலையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டது என தெரிந்து அப்பகுதியில் இருந்தவர்களும் பதறிப் போக பின்பு தான் அது காதலை வெளிப்படுத்துவதற்கான நாடகம் என்பதும் தெரிய வந்துள்ளது.
மிக மிக வித்தியாசமாக வாலிபர் காதலை வெளிப்படுத்தியது தொடர்பாக இந்த வீடியோ இணையத்தை தற்போது கலக்கி வருவதுடன் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "1958.. அப்பாவுக்கு கொடுத்த சத்தியம்".. கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மனம் கலங்க வைக்கும் ட்வீட்!!.. வைரல் பின்னணி!!
- காதல் கை கூடல... விபரீத முடிவை எடுக்க நினைத்த இளம்பெண்.. அப்படியே தலைகீழான சம்பவம்!!.. பரபர பின்னணி!!
- "இந்தியாவில் கால்பந்து உலக கோப்பை நடத்துற நாளும்".. பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு!!
- ஆன்லைனில் ஸ்போக்கன் இங்கிலீஷ் படிச்சு.. பேஸ்புக்கில் இந்தோனேசிய பெண்ணை காதலித்து கரம்பிடிச்ச இந்திய இளைஞர்!!..
- 2 பேருக்கும் 100 வயசு.. 79 வருஷ இல்லற வாழ்க்கை.. "மரணம் கூட இப்டி தான் வரணும்ன்னு இருக்கு பாருங்க".. மனதை ரணமாக்கிய சோகம்!!
- "அவரோட Bus ஓட்டுற ஸ்டைல் தான்"... 50 வயது டிரைவர் மீது காதலில் விழுந்த 24 வயது பெண்.. கடைசியில நடந்த ட்விஸ்ட்.!!!
- 42 வயது ஆசிரியரை திருமணம் செய்த 20 வயது மாணவி.. "லவ்ஸ் ஸ்டார்ட் ஆனது இப்டி தான்".. வைரலாகும் பின்னணி!!
- "இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்".. பைக்கில் போன காதல் ஜோடி.. நள்ளிரவில் மோதிய லாரியால் நேர்ந்த துயரம்!!
- “வேணாம்டா சாமி.. நாங்க இப்படியே இருந்துடுறோம்!”.. தென் கொரியாவில் அதிகரிக்கும் முரட்டு சிங்கிள்ஸ்..? இதுதான் காரணமா?
- காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு.. இரவு நேரத்தில் இளைஞரால் நேர்ந்த கொடூரம்.. கூட்டம் கூடியதும் இளைஞர் செஞ்ச அதிர்ச்சி செயல்!!