"2020 இப்டி தான் இருக்கும்..." '10' வருஷத்துக்கு முன்னாடி கணித்த 'நபர்'... வெச்சு செஞ்ச 'நெட்டிசன்கள்'...காரணம் என்ன??...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் ஒட்டுமொத்த மக்களால் மறக்க முடியாத ஒரு ஆண்டாக 2020 அமைந்து விட்டது. சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா என்னும் கொடிய வைரஸ் எந்த நாடையும் விட்டு வைக்கவில்லை.

ஊரடங்கால் வெளியே செல்லாமல் அனைவரும் கடும் நெருக்கடிக்குள் ஆகினர். சில நாடுகளில் தற்போது தான் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீராக ஆரம்பித்த நிலையில், மீண்டும் உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று பரவ தொடங்கி மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் நிலைமை சரியாக வேண்டுமென அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அதே போல, 2020 ஆம் ஆண்டு குறித்து பல மீம்ஸ்களையும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, 2020 ஆம் ஆண்டு குறித்து கடந்த 2010 ஆம் ஆண்டு கெவின் சிங் என்பவர் தெரிவித்திருந்த கருத்து தற்போது கேலிப் பொருளாகியுள்ளது. கெவின் சிங் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது தனது பள்ளிப் பருவத்தின் போது, '2020 ஆம் ஆண்டில் அனைவரும் நிம்மதியாக வாழ்வார்கள். அது மட்டுமில்லாமல் அனைத்து நோய்களையும் அந்த ஆண்டில் குணமாக்குவார்கள்' என கணித்து கூறியுள்ளார்.



 

2020 ஆம் ஆண்டில் உலகமே அல்லோலப்பட்டு கிடக்கும் நிலையில், கெவின் சிங் கணித்து கூறியுள்ள கருத்திற்கு நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர். இதனையடுத்து, சம்மந்தப்பட்ட அந்த நபர், 'என்னை மன்னிக்கவும்' என தனது கணிப்பிற்கு வருத்தம் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இருந்தாலும், அவரை விடாமல் தொடர்ந்து நெட்டிசன்கள் பல கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்